விஜயின் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வந்த சஞ்சயின் முதல் படம் இதோ.! வைரலாகும் வீடியோ..

0

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் உருவாகும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக விஜயின் மகன் திரைப்படங்களை இயக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது மேலும் சஞ்சய்க்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் வேண்டாம் எனக் கூறி வந்தார்.

இந்நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து வந்த விஜயின் மகன் சஞ்சயின் முதல் படம் குறித்த வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சஞ்சய் கனடாவில் உள்ள கல்லூரியில் திரைப்படம் இயக்குவதற்காக படித்து வந்த நிலையில் இது முடிந்தவுடன் மேற்படிப்புகளும் படித்து வந்தார்.

எனவே படிப்பு முடிந்தவுடன் விரைவில் தமிழ் திரைவுலகில் இயக்குனராக அறிமுகமாகுவாரா என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் விஜயின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் சமீப பேட்டி ஒன்றில் சஞ்சய் ஒரு இயக்குனராக தமிழ் திரைவுலகிற்கு அறிமுகமாவார் என்றும் அவருடைய முதல் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் கூறினார்.

சஞ்சய்க்கு விஜய் சேதுபதி என்றால் மிகவும் பிடிக்கும் எனவும் அவர்தான் விஜய் சேதுபதியை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க விரும்புகிறார் எனவும் கூறியிருந்தார். மேலும் சஞ்சய்க்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து வருவதாகவும் ஆனால் அவர் மேலும் படிக்க வேண்டும் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருந்து வருகிறார் என தெரிவித்தார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது விஜயின் மகன் சஞ்சய் தற்பொழுது குறும்படத்தை இயக்கி வருகிறார் என்று கூறப்படுகிறது அவருடைய இயக்கத்தில் உருவாகி வரும் குறும்படம் குறித்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இவருடன் இணைந்து மற்ற நண்பர்களும் பணியாற்றி வரும் நிலையில் இந்த குறும்படத்தை அடுத்து தமிழ் சினிமாவில் திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது எனவே அதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.