கார்த்தியின் அடுத்த பட டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் இதுவா.! புதிய கெட்டப்பில் மிரட்டுவார் போல

தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தை நோக்கி செல்லும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கார்த்தி.  இவர் சமீபகாலமாக சூப்பர் டூப்பர் ஹிட் சிறப்பம்சம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் அவரது ஒவ்வொரு திரைப்படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன.

அந்த வகையில் கைதி திரைப்படம் இவருக்கு எதிர்பாராத இமாலய வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததை தொடர்ந்து இவரின் சுல்தான் திரைப்படம் கதைகளும் வித்தியாசமாகவும் அதேசமயம் மக்கள் மற்றும் ரசிகர்களை கவரும்படி இருந்ததால் இந்த திரைப்படமும் தற்போது நல்லதொரு வரவேற்பை பெற்று உள்ளது.

இந்த நிலையில் கார்த்தியின் அடுத்த படத்தை இரும்புத்திரை பட இயக்குனர் மித்திரன் தான் இயக்க உள்ளார் என தகவல்கள் அடிக்கடி வெளியாகின ஆனால் அது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட இருந்த நிலையில் தற்போது கார்த்தி நிஜமாகவே மித்திரன் இயக்கம் திரைப்படத்தில் தற்போது கார்த்தி நடிக்க உள்ளார். அதன் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையதளத்தை ஆட்டிப் படைத்து வருகின்றன.

இச்செய்தியை கார்த்தி தனது சமூக வலைத்தள பக்கமான டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த படத்திற்கு “சர்தார்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதில் பணியாற்றும் படக்குழுவை பெயர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது இதில் இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் ,எடிட்டர் ரூபன், ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு, சண்டை காட்சிகள் சூப்புராயன் ஆகியோர் பணியில் உருவாக உள்ளது.

இந்த படத்தை மிக சிறப்பாக தயாரிக்க பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் எடுக்க உள்ளது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராசி கண்ணா, ரஜிஷா விஜயன் ஆகிய இருவரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் இதோ.

Leave a Comment