வாத்தி படத்தில் இருந்து வெளியான சூப்பர் அப்டேட் இதோ.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைபடம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான நானே வருவேன்  என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த திரைப்படம் நடிகர் தனுஷ் வாழ்க்கையில் ஒரு மோசமான திரைப்படமாக அமைந்தது. அதன் பின்னர் தற்போது வாத்தி திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார்.

இயக்குனர் அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ளா வாத்தி திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனைத் தொடர்ந்து வாத்தி படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு வாத்தி படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியே வராமல் இருந்து வந்த நிலையில் தற்போது வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதாவது வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி நடக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் வாத்தி படத்திலிருந்து ஒரே ஒரு பாடல்கள் மட்டும் வெளியாகிய நிலையில் அடுத்தடுத்த பாடல்கள் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. மேலும் வாத்தி திரைப்படத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் ஒரு பள்ளி ஆசிரியராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து  நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வாத்தி படம் வெளியான பிறகுதான் கேப்டன் மிலர் படத்தின் அப்டேட் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

Leave a Comment