தமிழ் சினிமாவில் இசைஞானி இளையராஜாவின் மகனாக சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர்தான் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இவர் தன்னுடைய சினிமா கேரியரில் ஏராளமான சிறந்த பாடல்களை கொடுத்தும் இதுவரையிலும் இவருக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்றாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்துள்ளது அந்த வகையில் யுவனின் திருமண வாழ்க்கை இரண்டு முறை தோல்வியில் முடிந்துள்ளது.
தற்பொழுது யுவன் சங்கர் ராஜாவிற்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. ஆனால் இவர் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றவர் இவர் கடந்த 2003ஆம் ஆண்டு காதலித்து சுஜயா என்பவரை வீட்டிற்கு தெரியாமல் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துக்கொண்டார். யுவன் சங்கர் ராஜா 2002ஆம் ஆண்டு லண்டனுக்கு இசை நிகழ்ச்சிக்காக செல்லும் பொழுது அவரை சந்தித்து காதல் கொண்டார்.
அதன் பிறகு பெற்றோர் சமதத்துடன் திருமணம் செய்து கொண்டு பின்னர் 2007ஆம் ஆண்டு விவாகரத்து பற்றிய பிரிந்தனர். நான்கு வருடங்களாக சிங்கிளாக வாழ்ந்து வந்த இவர் 2011ஆம் ஆண்டு ஷில்பா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்த திருமணமும் மிகவும் படுஜோராக நடைபெற்றது ஏராளமான பிரபலங்களும் வருகை தந்தனர். ஆனால் இந்த வாழ்க்கையும் சரியாக அமையாமல் இவன் விவாகரத்து பெற்றுக் கொண்டார்.

அதன் பிறகு கடந்த 2015ஆம் ஆண்டு ஜப்ருன் நிஷா என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினர்களுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இந்த மூன்றாவது திருமணத்திற்கு முன்பு யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்தை இயற்றிய தனது பெயரை அப்துல் காதி என மாற்றிக் கொண்டார்.

அதற்கு முக்கிய காரணம் இவர் இஸ்லாம் பெண்ணை காதலித்ததால் அந்த மதத்திற்கு மாறினார். இவ்வாறு இப்படிப்பட்ட நிலையில் நேற்று இரவு யுவனின் இசை கச்சேரி நடைபெற்றது அந்த கச்சேரி முடிந்தவுடன் பாடகர்கள் ஒன்றாக இணைந்து பாட்டு பாடி கொண்டாடினார். அப்பொழுது எடுத்த வீடியோவை பாடகி ரக்ஷிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அதில் யுவனின் மகளும் உள்ளார்.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.