தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா இவர் தனது சினிமா பயணத்தை தொடங்கியதிலிருந்து சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததால் இவரது ஒவ்வொரு படமும் வெற்றி படமாக மாறியது ஒரு கட்டத்தில் டாப் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
அந்த வகையில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி தன்னை நிரந்தரமாக தமிழ் சினிமாவில் தக்க வைத்துக் கொண்டார். அதே சமயம் மாடலிங் துறையிலும் நடிகை சமந்தா இருந்ததால் கிளாமர் காட்சிகளில் பின்னி பெடல் எடுப்பதை வழக்கமாக வைத்தார் சினிமா உலகில் இப்படி வெற்றியை தேர்வு செய்து ஓடிக் கொண்டிருந்த சமந்தா..
தெலுங்கு டாப் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக நான்கு வருடங்கள் கழித்து இருவரும் பிரிந்து விட்டனர் தற்பொழுது நடிகை சமந்தா எந்த மாதிரியான கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் நடிக்கின்ற லெவலுக்கு இறங்கி உள்ளார். அதனால் அவரது மார்க்கெட் முன்பை விட தற்பொழுது அதிகரித்துள்ளது. வாய்ப்புகளும் குவிந்து கொண்டு இருக்கின்றன.
சமந்தா கையில் தற்போது சகுந்தலம், யசோதா ஆகிய படங்கள் இருக்கின்றன இது போதாது என ஹிந்தியில் மூன்று படங்களில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பெயிரிடப்படாத ஒரு சில படங்களில் கமிட் ஆகியும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சமந்தா தனது அம்மா அப்பா உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
சமந்தா பெரும்பாலும் தனது அப்பா அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியானது கிடையாது தற்பொழுது வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் புகைப்படத்தை பார்த்து லைக்குகளையும் கமெண்ட்களையும் அள்ளி வீசி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

