தமிழ் சினிமாவில் புதுமுக நடிகையாக அறிமுகமானர் ப்ரியா பவானி ஷங்கர் சினிமா உலகில் இருக்கின்ற இடம் தெரியாமல் சைலண்டாக இருந்து தொடர்ந்து பட வாய்ப்புகளை அள்ளி மற்ற நடிகைகளை ஆச்சரிய படுத்துகிறார்.2021ல் கூட 8, 9 படங்களை தன் கைவசம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் இவருக்கு பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார். டாப் நடிகைகள் கூட பட வாய்ப்பை கைப்பற்ற முடியாமல் திணறும் நிலையில் ஒரு புதுமுக நடிகை இவர் இப்படி பட வாய்ப்பையே அள்ளுகிறார் என்பது தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.
இதுவே முக்கியக் காரணமும் நடிகை பிரியா பவானி சங்கர் குறைந்த சம்பளம் வாங்குவது மற்றும் சரியான சொன்ன தேதியில் படத்தை முடித்துக் கொண்டு இருக்கின்ற இடம் தெரியாமல் அமைதியாக போவதால் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் பிடித்த நபராக அவர் இருக்கிறார்.
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடர்ந்து பின் தனது அழகு மற்றும் திறமையின் மூலம் வெள்ளித்திரையில் வாய்ப்பைப் பெற்றார் ஆரம்பத்தில் இவர் படத்தின் கதைக்கு என்ன தேவையோ அதை கொடுத்து நடித்ததன் மூலம் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு பிடித்தமான நடிகையாக மாறியுள்ளார்.
மேலும் இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் ஓரளவு வெற்றியை பெறுவதால் தற்போது வாய்ப்புகள் கிடைத்த வண்ணமே இருக்கின்றன 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாதமான் என்ற திரைப்படத்தில் நடித்து நாயகியாக அறிமுகமானார் இது அவருக்கு முதல் படமும் கூட..
அதன் பின் மான்ஸ்டர், மாஃபியா,களத்தில் சந்திப்போம், ஓமன பெண்ணே, பிளட் மணி ஆகியவை நல்ல வெற்றியை பெற்ற தொடர்ந்து இப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கிறார். மேலும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் கமல், தனுஷ், அருண் விஜய் ஆகியோர் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியே ஓடிக்கொண்டிருக்க நடிகை பிரியா பவானி சங்கர் தனது உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ள ஜிம்மே கதி என்று கிடக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் தனது காதலனுடன் இவர் ஜிம் ஒர்க்கவுட் செய்துவிட்டு ரெஸ்ட் எடுக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.
