தளபதி 67 திரைப்படத்திலிருந்து லீக்கானா புகைப்படம் இதோ.! உற்ச்சாகத்தில் ரசிகர்கள்…

குறுகிய காலகட்டங்களில் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் முதன் முதலில் வெளியான மாநகரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தாலும் பெரிதாக சொல்லும் அளவிற்கு ரீச் ஆகவில்லை. ஆனால் நடிகர் கார்த்திக் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியை கொடுத்தது.

கதாநாயகி இல்லாமலும் பாடல் இல்லாமலும் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் பிறகு நடிகர் விஜயை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை கொடுத்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆபீஸில் நல்ல கலெக்ஷன் பார்த்தது.

அதன் பிறகு நீண்ட வருடங்களாக தோல்வி படங்களை கொடுத்த கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவை உச்சத்திற்கு கொண்டு சேர்த்தது. அந்த அளவிற்கு ஒரு பிரமாண்ட வெற்றியை கொடுத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் வைத்து இரண்டாவது முறையாக தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் தற்போது முடிவடைந்த நிலையில் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இன்னும் பத்து நாட்களில் தளபதி 67 திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மேலும் தளபதி 67 திரைப்படத்திற்கான பூஜை போடப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தளபதி 67 திரைப்படத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதோ அந்த புகைப்படம்.

thalapathy 67
thalapathy 67

Leave a Comment