இதுவரை நாம் பார்த்திராத ரஜினியின் ஜிம் புகைப்படம் இதோ.!

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர்களில் முக்கியமான நடிகராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் கடந்த சில வருடங்களாக வெளியாகும் எல்லா திரைப்படங்களுக்கும் இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான பேட்ட மற்றும் தர்பார் ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று ரசிகர்களிடையே அதிக நாட்கள் ஓடியது.

மேலும் இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து மீனா,குஷ்பு,நயன்தாரா,கீர்த்தி சுரேஷ் போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்து இருக்கிறார்கள் அந்த வகையில் பார்த்தால் சமீபத்தில் தான் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக தகவல் வெளியானது.

இதனையடுத்து ரஜினிகாந்த் தனது அடுத்த திரைப்படத்தை எந்த இயக்குனருக்கு கொடுப்பார் என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை இந்நிலையில் ரஜினியின் புகைப்படங்கள் சமீப நாட்களாக சமூக வலைதள பக்கங்களில் அவ்வபோது வெளியாகி வருகிறது அந்த வகையில் பார்த்தால் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் கசிந்துள்ளது.

rajini 54
rajini 54

ஆம் இந்த புகைப்படத்தில் ரஜினி ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படமாக தெரிகிறது மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் அதன் சீற்றங்கள் குறைவதில்லை என்ற பழமொழிக்கு ஏற்ப ரஜினியை பார்த்து கூறிவருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் தீவிரமாக ஷேர் செய்து வருகிறார்கள்.-

Leave a Comment