பள்ளி படிக்கும் போது நடிகை ஸ்ரேயா எடுத்துக்கொண்ட கியூட் புகைப்படம் இதோ.! அப்பவே அழகாக தான் இருக்காரு.

சினிமா உலகில் எடுத்தவுடனேயே சிறப்பம்சம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால் தொடர்ந்து டாப் நடிகர்களின் படங்களை வெகுவிரைவிலேயே கைப்பற்றினார் நடிகை ஸ்ரேயா. இவர் நடிப்பில் வெளியான ஒவ்வொரு திரைப்படமும் அதிரிபுதிரி ஹிட் அடித்தது.

இப்படி சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்த இவருக்கு சமீப காலங்களாக திரைஉலகம் இவருக்கு வாய்ப்புகளை கொடுக்காமலேயே வைத்து இருக்கிறது அதற்கான காரணம் இன்று வரையிலும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

சினிமா ஆரம்பத்தில் இவர் ரஜினியுடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ் மகன், தனுஷுடன் குட்டி போன்ற படங்களில் நடித்ததால் இவருக்கு தமிழ் தாண்டி பிற மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிந்தன.

இதனால் நடிகை ஸ்ரேயா பட ஆசையில் தமிழ், தெலுங்கு தாவி தாவி நடித்தார் இதனால் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை எந்த ஒரு சினிமா உலகிலும் பிடிக்காமல் போனது. ஒரு கட்டத்தில் புதுமுக நடிகைகள் வலம் வந்ததால் இவருக்கு மேலும் பட வாய்ப்புகள் சுத்தமாக கிடைக்காமல் போனது இதனை அறிந்து கொண்ட ஸ்ரேயாவும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வந்த  ஸ்ரேயாவுக்கு இப்பொழுதுதான் ஓரிரு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது அந்த வகையில் RRR, நரகாசுரன், கம்நம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார் இதனால் அவர் சினிமா உலகில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளார்.

என கூறப்படுகிறது இந்த நிலையில் ஸ்ரேயாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி  ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

shreya
shreya
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment