தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தல அஜித். இப்பொழுது எச் வினோத்துடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இத்திரைப்படத்தை மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் போனிகபூர் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு அஜித்தின் பிரதான இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது இருப்பினும் ரசிகர்களை சந்தோஷத்திலேயே வைத்திருக்க படத்தின் பர்ஸ்ட் லுக், முதல்பாடல்,glimpse ஆகியவற்றை வெளியிட்ட நிலையில் தற்போது அடுத்தடுத்த அஜித்தின் வலிமை பட புகைப்படங்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன இப்பொழுது கூட வில்லன் கார்த்திகேயா அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இப்படி படம் வெளிவருவதற்கு முன்பே பல செய்திகள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன இது போதாத குறைக்கு வினோத் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு செய்திகளை கொடுத்து படத்தை சின்னதாக பிரமோஷன் செய்து வருகிறார்கள். இது மட்டுமில்லாமல் அஜித் தற்போது அடுத்த படத்தில் இணைவதற்கு முன்பாக ஓய்வுக்காக அவ்வப்பொழுது ஊர் சுற்றுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது ஊர் சுற்றி வருகிறார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையதளத்தில் தீயாய் பரவியது மட்டுமல்லாமல் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர் இப்படி இருக்கின்ற நிலையில் பெரும்பாலும் ஷாலினியின் தம்பி ரிச்சர்ட் ரிஷி உடன் அவர் புகைப்படம் எடுத்தது கிடையாது.
முதல் முறையாக இணைந்து ரிச்சர்ட் ரிஷி மற்றும் அஜித் ஆகிய இருவரும் ஒன்று சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் தற்போது வந்துள்ளது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருவதோடு நீங்கள் ரெண்டு பேரும் செம்ம ஸ்டைலாக இருக்கிறார் என கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர்.
