மறைந்த நடிகர் மனோபாலாவின் அழகிய குடும்ப புகைப்படம் இதோ.!

தமிழ் திரை உலகில் நடிகர் பாரதிராஜாவின் உதவியாளராக இருந்து அதன் பிறகு 1979 ஆம் ஆண்டு புதிய வார்ப்புகள் என்ற திரைப்படத்தில் துணை இயக்குனராக அறிமுகமாகி தற்பொழுது தயாரிப்பாளர்,இயக்குனர்,நடிகர் என பல திறமைகளை வெளிக்காட்டி விட்டு இன்று திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை விட்டு பிரிந்த நடிகர் தான் மனோபாலா.

இவருக்கு 69 வயதாகும் நிலையில் கடந்த சில நாட்களாகவே மிகவும் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாம். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.

மேலும் இவரது இறப்பிற்கு பல சினிமா பிரபலங்களும் தங்களது இரங்கலை சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தார்கள். அதில் ஒரு சில பிரபலங்கள் நேரில் வந்தும் தனது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். நடிகர் மனோபாலா இறந்த பிறகு அவருடன் பணியாற்றி வந்த பல பிரபலங்களும் இனிமேல் இந்த நாட்கள் கிடைக்காது.

உங்களுடன் பணியாற்றி வந்த பொழுது நீங்கள் எங்களை சந்தோஷமாக எப்பொழுதும் வைத்துக் கொள்வீர்கள் என்றும் சோகமான கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.இந்நிலையில் நடிகர் மனோபாலாவின் மகன் அப்பாவின் இறுதி சடங்கு நாளை காலை நடைபெறும்.

என்றும் உங்களை அப்பாவிற்கு மிகவும் பிடிக்கும் எங்களுக்கு கொஞ்சம் இந்த நாட்களை கடந்து செல்ல உதவி செய்யுங்கள் என்று பத்திரிகையாளர்களிடம் கேட்டு உள்ளாராம்.அது மட்டுமல்லாமல் நடிகர் மனோபாலாவின் குடும்ப புகைப்படங்களும் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகர் மனோபாலாவை நாங்கள் ரொம்ப மிஸ் பண்ணுகிறோம் என்றும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

manobala
manobala

Leave a Comment