இதோ வந்தாச்சு துணிவு படத்தின் மாஸ் அப்டேட்.!

தமிழ் சினிமாவில் உச்ச நச்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் ஹெச் வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியாக காத்திருக்கிறது இதனை தொடர்ந்து இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் துணிவு திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் துணிவு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து துணிவு படத்தில் இருந்து அடிக்கடி ரசிகர்களை உசப்பேத்தி விடும் வகையில் துணிவு படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார்கள் அந்த வகையில் சமீபத்தில் துணிவு படத்திருக்கு பிரமோஷன் செய்வதற்காக வெளிநாட்டில் ஸ்கை டைவிங் மூலம் ப்ரோமோஷன் செய்தனர்.

இந்த வீடியோ இணையத்தில் வேலையாகி வைரலானது மட்டுமல்லாமல் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர் இதனை தொடர்ந்து துணிவு படம் வெளியாகும் அதே தினத்தில் நடிகர் விஜய்யின் வாரிசு படமும் வெளியாக உள்ளது இதனால் இந்த இரண்டு படத்தில் எந்த படம் வெற்றி அடையும் என்று ரசிகர்கள் மிகத் தீவிரமாக இறங்கி வேலை செய்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து துணிவு படத்தின் அப்டேட்டும் வாரிசு படத்தின் அப்டேட்டும் வந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் இன்று துணிவு படத்தில் இருந்து ஒரு அப்டேட் வெளியாகும் என பட குழு ஓரிரு தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தனர் அந்த வகையில் இன்று ஒரு சூப்பரான அப்டேட் வெளியாகி உள்ளது.

அதாவது துணிவு படத்தில் நடிகர் மோகன சுந்தரம் “மை பா” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் இவருடைய போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. ஒரு மாஸ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள துணிவு படத்தின் டிரைலர் நாளை வெளியாகலாம் என சோசியல் மீடியாவில் செய்திகள் பரவி வருகிறது.

Leave a Comment