லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு பிடித்த இரண்டு நடிகர்கள் இவுங்க தான்.?

மலையாள சினிமாவில் நடிக்கும் பெரும்பாலான நடிகைகள் தன் சொந்த மொழியில் வெற்றி பெறுகிறாரோ இல்லையோ பிற மொழிகளில் முன்னணி நடிகைகளாக வலம் வருகின்றனர். அவர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தமிழில் முதலில் ஐயா என்ற திரைப்படத்தில் சரத்குமார்க்கு ஜோடியாக நடித்து அறிமுகமானர்.

முதல் படமே சூப்பர்ஹிட் படமாக அமைந்ததால் அதன்பின் இவர் டாப் நடிகர்களின் படங்களில் மட்டுமே நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் நடிகை நயன்தாரா. அந்த வகையில் ரஜினி விஜய் அஜித் சூர்யா விக்ரம் சிவகார்த்திகேயன் ஜெயம் ரவி போன்ற டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக மாறினார்.

தமிழ் தாண்டி தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து அசத்தி வருகிறார். உலகில் பல நடிகர்களுடன் நடித்து இருந்தாலும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு பிடித்த ஹீரோக்கள் என்றால் வெகு சிலரே அதில் முதன்மையானவராக பார்க்கப்படுபவர் ரஜினி அடுத்ததாக அஜித் அவர்கள் இருவரையும் பல மேடைகளில் புகழ்ந்து பேசியுள்ளார் நயன்தாரா.

அவர் கூறுவது சூட்டிங் ஸ்டார்ட் ஆக இருந்தாலும் சரி பொது இடமாக இருந்தாலும் சரி நீங்கள் அஜித்தையும் அல்லது ரஜினியை நேரில் பார்க்க சென்றால் உடனே எழுந்து மரியாதை கொடுத்து உங்களை உட்கார வைத்த பின்புதான் அவர்கள் உட்காருவார்கள் அவர்கள் ஒரு ஜென்டில்மேன் பெண்களுக்கு மரியாதை கொடுக்க தெரிந்தவர்கள்.

யாரை எப்படி நடத்த வேண்டும் என்பதை நன்கு உணர்ந்து இருக்கிறார்கள் என கூறி அசத்தியுள்ளார். நயன்தாராவுடன் பல நடிகர் நடிகைகள் நடித்திருந்தாலும் அவர் அதிகம் பற்றி பேசுவது அஜித் மற்றும் ரஜினியை தானா அந்த அளவிற்கு ரொம்ப பிடிக்குமாம்.

Leave a Comment