2022-ல் மிகப்பெரிய ரிச்சினை பெற்ற டாப் 10 வெப் சீரிஸ் இதோ.!

திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதேபோல் வெப் சீரிஸ்க்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது சமீப காலங்களாக வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் 2022ஆம் ஆண்டு வெளியான வெப் சீரியல்களில் எந்த வெப் சீரியலுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ரீச்சினை பெற்றுள்ளது என்பதை அடிப்படையாக வைத்து முதல் பத்து இடங்களை பிடித்து இருக்கும் தொடரின் பட்டியல் தற்பொழுது வெளியாகி உள்ளது.

அதாவது வருடம் தோறும் அந்த ஆண்டின் முடிவில் இந்தியாவில் திரைப்படங்களை ரேட்டிங் செய்வதை ஐஎம்டிபி நிறுவனம் வழக்கமாக வைத்துள்ளது அந்த வகையில் இந்தியாவில் திரைப்படங்களின் அளவிற்கு வலை தொடர்களுக்கும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமீப காலங்களாக மாநில மொழிகளிலும் வலைத்தொடர்கள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த ஆண்டு இந்தியாவில் வெளியான வெப் சீரியல்களில் எந்த சீரியல்கள் டாப் 10 இடத்தை பிடித்து இருக்கிறது என்ற பட்டியலை ஐஎம்டிபி நிறுவனம் வெளியிட்டுள்ளது அதன்படி முதலிடத்தை பஞ்சாயத் தொடர் பிடித்துள்ளது இந்த வெப் சீரிஸ் அமேசானில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு தில்லி கிரைம் இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளது இந்த வெப் சீரிஸ் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. மூன்றாவது இடத்தினை ராக்கெட் பாய்ஸ் பிடித்துள்ளது இது  சோனியில் வெளியானது மேலும் நான்காவது இடத்தினை ஹாட்ஸ்டார் வழியாக ஹியூமன் தொடர் பிடித்துள்ளது.

மேலும் ஐந்தாவது இடத்தில் க்யூட் செயலியல் மூலம் வெளியான ஆப்கான் பிடித்துள்ளது பிறகு சோனியில் வெளியான குல்லாக் ஆறாவது இடத்தினையும், என்சிஆர் நாளிதழ் ஏழாவது இடத்தினையும், அபே தொடர் எட்டாவது இடத்தினையும் பெற்றுள்ளது. மேலும் இந்த தொடர் ஜி ஓடிடி தளத்தில் வெளியானது ஒன்பதாவது இடத்தில் எம் எக்ஸ் பிளேயரில் வெளியான காம்பஸ் டைரிஸ், பத்தாவது இடத்தில் சோனியல் வெளியான காலேஜ் ரொமான்ஸ் இடம்பெற்றுள்ளது.

Leave a Comment