இந்தியா முழுவதும் நேற்று 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல இடங்களில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு வந்தது. மேலும் பாரத பிரதமர் மோடியின் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நேற்று சென்னையில் தேசிய கொடி ஏற்றி சிறப்பு உரையாற்றினார்.
இந்நிலையில் நாடு முழுவதும் இந்தியாவின் 76 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது இதன் காரணமாக பொதுமக்களையும் தாண்டி திரை நட்சத்திரங்களும் இன்று சுதந்திர தினத்தில் கலந்து கொண்டனர் இது குறித்து தங்களுடைய சோசியல் மீடியாவிலும் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


அந்த வகையில் கேஜிஎப் நடிகர் யாஷ் சமூக வலைதளத்தில் தனது மகன்,மகள், மனைவி என தனது குடும்பத்துடன் தேசியக்கொடியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்திருந்தார். அதேபோல் பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் தேசியக்கொடி ஏற்றி அருகில் என்ற புகைப்படத்தையும் பார்த்தோம்.


மோகன்லால், பாடகி சித்ரா,நடிகர் சோனு சூட் ஆகியோர்களும் அனுஷ்காவும் தனது கணவர் விராட் கோலி உடன் தேசிய கொடியை கையில் ஏந்தி உள்ள புகைப்படங்களை பதிவு செய்திருந்தார். சூரி தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றியதை எடுத்து அந்த கொடியின் அருகே எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.


ஆனால் அவர் வீடு துடைக்கும் குச்சியில் தேசியக்கொடி ஏற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது இவர்களை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், இசைஞானி இளைய ராஜா உள்ளிட்ட பலரும் தங்களது வீடுகளில் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள். ஒட்டு மொத்த திரை பிரபலங்களும் தனது தேசியக் கொடியுடன் இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.



