விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் தான் ஹரிஷ் கல்யாண். இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இந்த நிகழ்ச்சி இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது மேலும் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஈஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் மேலும் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக இருந்து வரும் நடிகர்களின் லிஸ்டில் இவரும் சேர்ந்துள்ளார் இவருக்கு பெண் ரசிகர்கள் கூட்டம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ‘நூறு கோடி வானவில்’ திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இதனை தொடர்ந்து தற்பொழுது இவர் ” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இவ்வாறு தொடர்ந்து பல படங்களில் நடித்த மிகவும் பிசியாக இருந்து வரும் இவர் சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணை சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தெரிவித்தார்.
மேலும் அதில் ‘தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கியமான பங்கின் தொடக்கத்தை துவங்க உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன் உங்கள் அனைவரின் ஆசியுடன் நர்மதா உதயகுமார் எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என குறிப்பிட்டு இருந்தார். மேலும் இவர்கள் குறித்த புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலானது.

இப்படிப்பட்ட நிலையில் இன்று சென்னை திருவோர் காட்டிலுள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடிகர் ஹரிஷ் கல்யாணிக்கும், நர்மதா உதயகுமார் இருவிட்டார் சமூகத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்று இருக்கிறது. மேலும் இதில் ஏராளமான திரைப்பிரபலங்கள் மற்றும் இரு விட்டாரின் உறவினர்கள் கலந்து கொண்டு ஆசீர்வாதம் செய்திருக்கிறார் இது குறித்து பலரும் சோசியல் மீடியாவின் மூலம் இவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்.