தமிழ் திரைவுலகில் முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாமல் மூத்த நடிகராக பலருக்கும் உதாரணமாக இருந்து வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இத்தனை ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றிருக்கும் ஒரே நடிகர் இவர்தான் இவர் ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்கள் இருக்கு பிறகு தான் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.
அதன் பிறகு இவருடைய புகழ் சினிமாவில் பிரபலமடைந்தது. மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த முத்து மற்றும் படையப்பா போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றினை பெற்று தந்தது இந்த இரண்டு திரைப்படங்களையும் கே எஸ் ரவிக்குமார் அவர்கள் இயக்கியிருந்தார். விமர்சன ரீதியாகவும் இந்த திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் ரஜினியின் புகழ் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.
இந்த திரைப்படங்கள் தான் இவருக்கு தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்று தந்தது.அதன் பிறகு தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வருகிறார்.மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் என ஏராளமான மொழி திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது வரையிலும் இவர் 165 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இப்படிப்பட்ட நிலையில் அடுத்தடுத்து தன்னுடைய படங்களில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இவ்வாறு சினிமாவில் உயர்ந்துள்ள இவர் ஆரம்பகால கட்டத்தில் மேடை நாடகங்களில் நடித்திருந்தார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அந்த வகையில் தற்பொழுது ரஜினிகாந்த் மேடை நாடகத்தில் நடித்திருந்த அரிதான புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது மேலும் இந்த புகைப்படம் 70 காலகட்டத்தில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.