ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன இதயம் பட நாயகியிமான அஜித்தின் முன்னாள் காதலியுமான ஹீரா ராஜகோபால். இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

0

Hera Rajagopal, the ex-girlfriend of Ajith, ithayam movie actress has changed:நடிகை ஹீரா ராஜகோபால் முரளி உடன் இணைந்து இதயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தின் மூலம் இவர் இளைஞர்களது கனவுக்கன்னியாக வலம் வந்தார். மேலும் திரைப்படத்தின் மூலம் இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இதனைதொடர்ந்து இவர் நீ பாதி நான் பாதி, தசரதன், திருடா திருடா, சதிலீலாவதி, காதல் கோட்டை, அவ்வை சண்முகி, தொடரும், சுயம்வரம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரின் சிறந்த நடிப்பின் மூலம் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவருக்கும் அஜித்திற்கும் இடையே காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல் வெளியாகி சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த  கிசுகிசுவால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. பின்னர் 2002 ஆம் ஆண்டு தொழிலதிபர் புஷ்கர் மாதவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2006ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

தற்போது தனிமையில் இருக்கும் நடிகை ஹீரா ராஜகோபால் என்ஜிஓ உதவி மையங்களை ஆரம்பிக்கும உதவி வருகிறார். அதுமட்டுமல்லாமல் புத்தகங்கள் எழுதுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதன் மூலம் ஒரு எழுத்தாளராக பிரபலமடைந்து வருகிறார்.

தற்போது இவர் எப்படி உள்ளார் என்கின்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

ajith-kumar-and-heera-tamil360newz
ajith-kumar-and-heera-tamil360newz
Heera-rajagopal-tamil360newz
Heera-rajagopal-tamil360newz
HeeraRajagopal 1-tamil360newz
HeeraRajagopal 1-tamil360newz