அந்த இரண்டு நடிகர்களால் தான் ஹீரா வாழ்கை இப்படி ஆனதா.? அதுக்காக இன்னும் சிங்கிள்ஸ் தானா.!

hera
hera

நடிகை ஹீரா ராஜகோபால் 1991ஆம் ஆண்டில் முரளி நடிப்பில் வெளிவந்த இதயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவரின் வசீகரமான தோற்றத்தினால் சினிமாவில் பல நடிகர்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இவர் சினிமாவிற்கு அறிமுகமான சில காலகட்டத்திலேயே கமல்,மம்முட்டி, சிரஞ்சீவி,அஜித் குமார், நாகர்ஜுனா, பாலகிருஷ்ணா, வினீத்,கார்த்திக்,ரவி தேஜா உட்பட இன்னும் ஏராளமான பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம்,தெலுங்கு,கன்னடம் மற்றும் இந்தி போன்ற பிற மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் சினிமா வாழ்க்கையில் திருடா திருடா திரைப்படம் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது இப்படத்தின் மூலம் பல பாராட்டுகளை பெற்றவர்.

இவ்வாறு இவர் திரை வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் முன்னணி நடிகரான சரத்குமார் மீது காதல் வயப்பட்டார். இவர்களின் காதல் வாழ்க்கை நீண்ட காலம் நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் சரத்குமார் ஹீராவை திருமணம் செய்ய ஆசைப்பட்டு பொண்ணு கேட்க ஹீராவின் வீட்டிற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் சில நாட்கள் போகப்போக இவர்கள் இருவரும் பிரிந்து திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காண்பித்து வந்தார்கள் அதன் பிறகு என்ன ஆனது என்றே தெரியவில்லை.

ஹீரா அஜித்துடன் இணைந்து தொடரும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அஜித் மற்றும் ஹீரா காதல் வயப்பட்டார்கள். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக  நடித்திருந்தார்கள்.

அப்பொழுது பல பத்திரிகைகளில் கூட அஜித் ஹீராவிற்கு  காதல் கடிதம் எழுதிய விஷயம் மிகவும் வைரலானது. பிறகு அஜித் மற்றும் ஹீரா குடும்பத்தினர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல் வெளிவந்தது.  இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

தற்பொழுது தல அஜிதாக இருக்கட்டும் சரத்குமாராக இருக்கட்டும் இருவரும் தங்களது குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள் ஆனால் ஹீரா தனியாக தன் வாழ்நாளை கழித்து வருகிறார்.

இந்நிலையில் ஹிரா 2002ஆம் ஆண்டு தொழிலதிபர் புஷ்கர் நாட்டுவை திருமணம் செய்து கொண்டார். பிறகு இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 2006 ஆம் ஆண்டு விவகாரத்து ஆகிவிட்டது.