மீண்டும் பாரதி கண்ணம்மாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முயற்சி செய்யும் ஹேமா.. வைரலாகும் புதிய புரோமோ.

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் குடும்பங்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த தொடர் கடந்த மூன்று வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் டிஆர்பி யிலும் தொடர்ந்தும் முன்னிலையில் வகிக்கும் சீரியல் ஆகும்.

இந்த சீரியலில் முதன்மை ரோலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து பாதியிலே விலகி அவருக்கு பதில் தற்போது வினுஷா தேவி நடித்து வருகிறார். இப்படி சீரியலில் மெயின் கேரக்டர் மாறினால் சீரியல் சற்று அடிவாங்கும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வினுஷா தேவியும் சிறப்பாக நடித்து வருகிறார்.

மேலும் இந்த தொடரை தொடர்ந்து முன்னிலையில் வைத்து வருகிறார் அந்த வகையில் தற்போது சில எதிர்பார்க்காத புதுப் திருப்பங்களும்  நடைபெற்று வருகின்றன. பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமா சில நாட்களாகவே தனது அப்பா பாரதிக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க வேண்டும் என நினைத்து வருகிறார்.

இந்த நிலையில் நம்ப குடும்பத்தின் மேல் மிகவும் அக்கறையுள்ள சமையல் அம்மாவை அப்பாவுக்கு திருமணம் செய்து வைத்து விடலாம் என நினைத்து வருகின்றன. புதிதாக வந்த ப்ரோமோவில் ஹேமா மற்றும் கண்ணம்மாவின் மகள் லக்ஷ்மி இருவரும் ஒரே ஸ்கூலில் படித்து வரும் நிலையில் ஹேமா தனக்கு தோன்றிய யோசனையை லட்சுமி இடமும் கூறியுள்ளார்.

ஹேமா பாரதி மற்றும் கண்ணம்மா தனது பெற்றோர்கள் என தெரியாமலேயே என்னுடைய அப்பாவுக்கும் உனது அம்மாவுக்கும் திருமணம் செய்து வைத்து விடலாமா என லட்சுமியிடம் கேட்டுள்ளார்.இதற்கு லட்சுமியின் முடிவு என்னவாக இருக்கும் என்பதே ரசிகர்களின் கேள்விக்குறியாக இருக்கிறது.

Leave a Comment