நேற்று மட்டும் சென்னையில் 20 லட்சம் ரூபாய் அபதாரம்.! டிராபிக் போலீஸ் அதிரடி

0
police
police

தீவிரவாதிகளையும், கொலை குற்றவாளிகளையும், ரவுடிகளையும் பிடித்து வந்தார்கள் போலீஸ் தற்போது மிக வேகமாக ஹெல்மெட் அணியாதவர்களை லைசென்ஸ் இல்லாதவர்களையும் விரட்டி விரட்டி சுற்றிவளைத்து பிடித்து வருகிறார்கள் சென்னை டிராபிக் போலீஸ், நேற்று மட்டும் ஹெல்மெட் அணியாதவர்களை பிடித்ததில் 20 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் பயணிப்பவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் டிராபிக் போலீஸ் கிடுக்கு பிடி போட்டு உள்ளார்கள், அதாவது தீவிர சோதனை செய்து வருகிறார்கள் இந்த தீவிர சோதனையில் தலைக்கவசம் அணியாதவர்கள், லைசன்ஸ் இல்லாதவர்கள் என அனைவரையும் பிடித்தது, அதனால் ஒரே நாளில் 20 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டுள்ளன அதேபோல் இதன் மூலம் சுமார் 20 லட்சம் ரூபாய் அபராதமாக பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

முன்பு எல்லாம் ட்ராபிக் போலீஸ் சிக்னலை கடந்து வந்தவுடன் தான் பிடிப்பார்கள் ஆனால் இப்பொழுது சிக்னலில் நிற்பவர்களையும், வாகன நெரிசலில் நிற்பவர்களையும் சாவியை பிடுங்கி கொண்டு அதிரடி வேட்டை நடத்தியது அது மட்டுமில்லாமல் பின்சீட்டில் உள்ளவர்கள் ஹெல்மட் இல்லை என்றால் அவர்களும் தப்ப முடியாது இவ்வாறுதான் நேற்று பல வழக்கு பதிவுகள் போடப்பட்டுள்ளன.