திரைப்படம் என்ற பெயரில் வளச்சு வளச்சு மொக்கை போடும் ராஜேஷ்.!படு மொக்கையாக வெளிவந்த வணக்கம்டா மாப்ள ட்ரைலர்.!

தமிழ் திரை உலகில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்து வந்த இயக்குனர்கள் அடுத்தடுத்த திரைப்படங்களில் தவறு செய்து கொண்டே வருகிறார்கள் அதாவது மொக்கை போடும் அளவிற்கு படங்களை தற்போது பல இயக்குனர்கள் எடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஒரு காலத்தில் சிவா மனசுல சக்தி,பாஸ் என்கிற பாஸ்கரன்,ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற தரமான திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வந்த இயக்குனர் தான் ராஜேஷ்.

இவர் ஆரம்ப காலகட்டத்தில் எடுத்த எல்லா திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் இவர் மொக்கை போடும் அளவிற்கு பஞ்ச் டயலாக் கூட ஒழுங்கா இல்லை என சொல்லும் அளவிற்கு ரசிகர்களிடம் இருந்து பல விமர்சனத்தை வாங்கி கொண்டிருந்தார்.

அவரது தோல்வி திரைப்படங்களை குறிக்கும் வகையில் ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் இருந்து ஆரம்பித்து விட்டது அதனை தொடர்ந்து அடுத்த அடுத்ததாக இவர் இயக்கிய திரைப்படங்கள் படு மொக்கையாக இருந்துவிட்டது.ஆனால் அதன்பிறகு வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படம் கூட ரசிகர்கள் மத்தியில் ஓரளவு நன்றாக இருந்தது.

இந்நிலையில் இவர் தற்போது வணக்கம் டா மாப்பிள்ளை என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தின் ட்ரைலர் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது மேலும் இந்த படத்தில் ஜி.வி பிரகாஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்பது தெரியவருகிறது.இதையடுத்து இந்த ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் பலரும் என்னடா இது படம் என சலிப்பு தன்மையோடு கூறியது மட்டுமல்லாமல் இந்த ட்ரைலர் மிகவும் நன்றாகவே இல்லை என கூறி வருகிறார்கள்.

ஏனென்றால் இந்த படத்தில் ஒரு சீன் கூட ரசிகர்களுக்கு சிரிப்பு வரவில்லையாம்.  மேலும் இந்த ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் பலரும் ஏடாகூடமான கமெண்ட்டை பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment