கனமழை எதிரொலி.! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!

0

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது, குறிப்பாக உள்மாவட்டங்களில் தென் தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதனை தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 3 நாட்கள் லேசான அல்லது மிதமான வரை மழை பெய்து வரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக சில மாவட்டங்களுக்கு கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உள்ளார்கள், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு, வேலூர், ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது மீண்டும் தேர்வு நடைபெறும் நாள் அறிவிக்கப்படும் என துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.