இடி மின்னலுடன் தமிழகத்தில் 4 மாவட்டத்தை துவும்சம் செய்யப் போகும் மழை..! வானிலை ஆய்வு மையம் எச்சரிப்பு..!

heavy rain alert this four district: சுமார் இரண்டு வாரங்களாக தமிழகத்தை புரட்டிப் போட்டு வரும் இந்த மழையானது தமிழக மக்களை தனது அன்றாட பணிகளை கூட செய்ய விடாமல் தடுத்து வருகிறது.

முதலில் நிவர் புயல் மூலமாக ஆரம்பித்து இந்த மழையானது படிப்படியாக புரவி புயலாக மாறி தற்போது தமிழகத்தை பயம்புருத்தி வருகிறது இந்நிலையில் கடலூர் மாவட்டத்தின் விளைச்சல் நிலங்கள் அனைத்தையும் தும்சம் செய்து அவற்றை கடலாகவே மாற்றியது .

தற்சமயம் சிதம்பரத்தில் மிக பழம்பெரும் கோயிலான நடராஜன் கோயிலில் மூன்று அடி உயரத்திற்கு நீர் தேங்கி நிற்கும் அளவிற்கு மழை பெய்துள்ளது.  ஆனால் இந்த மழை நீர் வெளியேறுவதற்கு சரியான வடிகால் சிதம்பரம் கோயிலில் இருக்கு என ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் இப்படி ஒரு சம்பவம் ஏற்பட்டதன் காரணமாக பக்தர்கள் அனைவரும் ஆவேசத்துடன் இருக்கிறார்கள்.  இந்நிலையில் மன்னர் வளைகுடா கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்சமயம் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே நிலை கொண்டு நிற்கிறது.

rain
rain

இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் தூத்துக்குடி சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

அது மட்டுமில்லாமல் மற்ற இடங்களில் கன மழையோ அல்லது இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறி உள்ளார்கள். நேற்று காலை முதல் இரவு வரை சுமார் 24 மணி நேரத்தில் 10 சென்டிமீட்டர் மழை பெய்து திருவாரூர் மாவட்டத்தை புரட்டிப் போட்டு விட்டது.

இந்நிலையில் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் கடலோர வாசிகளை கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Comment