நெஞ்சிவலி , கொரோனாவில் இருந்து மீண்டு வந்த அருண் பாண்டியன்.! சந்தோஷத்தில் கீர்த்திபாண்டியன் போட்ட பதிவு.

0

ஊமை விழிகள், இணைந்த கைகள் ஆகிய சிறப்பான படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் அருண்பாண்டியன் ஆனால் ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு படங்களை தயாரிக்கவும் இயக்கமும் களத்தில் இறங்கினார் மேலும் அரசியல்வாதியாகவும் தற்பொழுது பயணிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் ஐயங்கரன் பட நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரைத் தொடர்ந்து இவரது மகள் கீர்த்தி சுரேஷ் சித்தப்பா மகள் ரம்யா பாண்டியன் ஆகியோர் சினிமாவில் களம் இறங்கி தற்போது நடித்து வருகின்றனர் நடிகர் அருண்பாண்டியன் கடந்த மாதம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்பொழுது இவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அப்பொழுது இவருக்கு பாஸிட்டிவ் என வந்ததால் மொத்த குடும்பமே அலறியது. பிறகு மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் தற்போது அதிலிருந்து மிண்டுதுள்ளார்.

தற்போது அவருக்கு கொரோனா நெகட்டிவ் வந்துள்ளதால் மொத்த குடும்பமே மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறது  அவர் பூரண குணம் அடைந்து விட்டார் என டாக்டர்கள் கூறியதாவது சந்தோஷத்தின் உச்சியில் குதித்துள்ளார் கீர்த்தி பாண்டியன்.

எனது அப்பாவுக்கு வயது 62 ஆகிறது நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் நாங்கள் முதலில் பயந்தோம் பின் எனது அப்பா கொரோனா தடுப்பூசியும் டோஸ்க்களையும் போட்டுக் கொண்டதால் அதிலிருந்து மீண்டு உள்ளார் என கூறினார். தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இதோ நீங்களே பாருங்கள்.