உங்கள் பாதங்களில் பித்த வெடிப்பு இருக்கிறதா.! இதோ வீட்டிலேயே சிகிச்சை பெறலாம்.!

0

பொதுவாக சிலருக்கு பாதங்களில் வெடிப்பு என்பது மழைக்காலங்களில் மட்டுமல்லாமல் எல்லா நேரங்களிலும் இருப்பதை காணமுடிகிறது, அப்படி பாதங்களில் வெடிப்பு வருவதால் தாங்க முடியாத வலி, நடப்பதற்கு சிரமத்தைக் கொடுக்கும், சிலருக்கு ரத்தக் கசிவும் இருக்கும். அப்படி வெடிப்பு இல்லாமல் பாதம் மென்மையாகவும் அழகாகவும் இருக்க வேண்டுமா சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலே போதும்.

பாதங்களுக்கு மேல் உள்ள இறந்த செல்களை நீக்குவதற்காக சில எளிய முறை ஸ்கரப் பயன்படுத்தலாம்.

இதற்கு தேவையான பொருட்கள் சக்கரை, கொஞ்சம் சோப் ஆயில், தேங்காய் எண்ணெய், மூன்றையும் ஒரு கிண்ணத்தில் கலந்து கொள்ள வேண்டும் அதைப் பித்த வெடிப்பு பாதங்களில் தடவி 5 நிமிடம் ஸ்கிரப் செய்ய வேண்டும் பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் பாதங்களை நன்கு கழுவ வேண்டும்.

நீர் சிகிச்சை : இதற்கு  நீர், கல்லுப்பு, சோப் ஆயில், ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய்.

ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி அதில் சோப் ஆயில், கல்லுப்பு ஆலிவ் ஆயில் கலந்து கொண்டு அதில் பாதங்களை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும் பின்பு குதியங்கால்களை தேய்த்து இறந்த செல்களை நீக்கிவிடலாம். பின்பு தேங்காய் எண்ணெயை கொண்டு தேய்த்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வர பாதங்கள் அழகாகும்.