பள்ளிகளில் இனி தலைமையாசிரியர் கிடையாது.! அதிரடியில் அமைச்சர் செங்கோட்டையன்.!

0
school
school

அமைச்சர் செங்கோட்டையன் கல்வி துறை அமைச்சராக பொறுப்பேற்ற திலிருந்து, கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கான ரேங்கிங் முறையை நிறுத்தியுள்ளார், மதிப்பெண்கள் மட்டுமே இனிமேல் வெளியிடப்படும் என நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளார், மேலும் இன்னும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் பள்ளிக்கல்வித் துறை சார்பாக புதிய அறிவிப்பை வெளியிடப் பட்டுள்ளது, அதனடிப்படையில் தொடக்கக் கல்வி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இனி கிடையாது, அவர்கள் அனைவரையும் ஆசிரியர்கள் என்று அழைக்கப்படுவார்கள், அதேபோல் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தால் அவர்களை இனிமேல் பள்ளி முதல்வர் என்றும் அழைக்கப் படுவார்கள்.

அதே போல் ஒரே வளாகத்திற்குள் செயல்படும் தொடக்க பள்ளிகள் அதிகாரங்கள் அனைத்தும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது அடுத்து பள்ளிக்கல்வித்துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது, மேலும் ஆசிரியர்களின் பணி தேர்வு நடத்துதல் விடுமுறை அளித்தல் மாணவர்களை சேர்க்கை என அனைத்து முடிவுகளையும் மேல்நிலைப்பள்ளி முதல்வரே எடுப்பார் என தெரிவித்துள்ளார்கள்.