பள்ளியிலிருந்து வெளியே அனுப்பிவிட்டார்கள் இட்லி கடை நடத்தி வயிறு பசி போக்கும் தலைமையாசிரியர்.!

0

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, அதனால் ஏகப்பட்ட பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது, அதனால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பலர் தற்பொழுது வீதிக்கு வரும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கொரனோ வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

அமைப்புசாரா தொழிலாளர்கள், ஆதரவற்றோர், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர், அதுமட்டுமல்லாமல் மத்திய உள்துறை அமைச்சகம் ஊரடங்கு சில தவறுகளை அறிவித்து ஊரடங்கு நீட்டித்தத இருந்தாலும் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை.

ஊரடங்கு காரணமாக பல தொழில் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது தனியார் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களும் அடங்கும், இந்த நிலையில் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடம் நடத்தி அதிலிருந்து வரும் வருமானங்களை ஆசிரியர்களுக்கு வழங்கலாம் என பள்ளி நிர்வாகங்கள் முடிவெடுத்தாலும் வீட்டில் ஸ்மார்ட்போன் இல்லாத மாணவர்கள் ஆன்லைன் வழியாக பாடங்களை சரியாக கற்க முடிவதில்லை அதுமட்டுமில்லாமல் சரியான நெட்வொர்க் கிடைப்பதில்லை.

இந்த நிலையில் தற்போது தனியார் பள்ளி ஆசிரியர்கள் வீதிக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது ஊரடங்கு காரணமாக தெலுங்கானாவை சேர்ந்த கம்பம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியர் மரகனி ரம்பாபு கூறுகையில், இனி பள்ளிக்கு தலைமை ஆசிரியர் தேவை இல்லை என கூறி விட்டார்கள் எனது வீட்டிற்கு என்னுடைய வருமானம் மட்டுமே மிகவும் முக்கியமாக இருந்தது மனைவியும் வேலைக்கு செல்வதில்லை.

அதனால் கடந்த 5ம் தேதியிலிருந்து 2000 ரூபாய்க்கு ஒரு தள்ளு வண்டியை வாங்கி இட்லி கடை வைத்து நடத்தி வருகிறேன் தினமும் இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தோசை, இட்லி வழங்கி வருகிறேன் கடந்த மாதம் தலைமை ஆசிரியராக இருந்த பொழுது  22,000 ரூபாய் சம்பாதித்த நான் தற்பொழுது தள்ளு வண்டி வைத்துக்கொண்டு தினமும் 200 ரூபாய் மட்டுமே சம்பாதித்து வருகிறேன் என வருத்தத்துடன் கூறினார்.