Ind vs Eng இடையிலான போட்டியின் போது தல ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு உள்ளனர்.! வைரலாகும் புகைப்படம்.

தல அஜித் ஹச். வினோத்துடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அஜித் இதுவரையில் நடித்த படங்களின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அவ்வபோது அப்டேட் வெளிவந்திருக்கும்.

ஆனால் இந்த படத்தில் இருந்து இதுவரை எந்த ஒரு அப்டேட் சமீபகாலமாக சரியாக கொடுக்காததால் செம அப்செட் ஆனார்கள் ரசிகர்கள்.

இந்த நிலையில் அண்மையில் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படத்தின் அப்டேட்டை  வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து வேறு ஏதாவது அப்டேட்டை வெளியிட வேண்டும் என ரசிகர்கள் கூறிக்கொண்டு வருகின்றனர் அதனை வெளிப்படுத்தும் விதமாக இந்தியா – இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது.

இதை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. விளையாட்டைக் கண்டு களித்து வரும் ரசிகர்ளில் ஒருவர் வலிமை படத்தின் அப்டேட்டை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார்.

அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

valimai—ajith

Leave a Comment

Exit mobile version