மும்பை இந்தியன்ஸ் உடனான முதல் போட்டியில் டூபிளெஸ்ஸிக்கு பதிலாக களம் இறங்க போகும் CSK தொடக்க வீரர் இவர் தான்.! ஷாக்கான CSK ரசிகர்கள்.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஐபிஎல் தொடர் பாதியுடன் நிறுத்தப்பட்டு இருந்தாலும் அந்த தொடரை முழுமையாக முடித்து விட வேண்டும் என BCCI ஒரு வழியாக மீதி போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு எடுத்தது. அதன்படி வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி மீதி போட்டிகள் நடத்த இருக்கின்றன.

முதலாவதாக இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத இருக்கின்றன. ஏற்கனவே இந்த தொடரில் CSK  முதல் 7 போட்டிகளில் 5 வெற்றியை ருசித்து உள்ளது இரண்டு தோல்வியை சந்தித்துள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது இருக்கின்ற போட்டிகளில் ஒரு சில போட்டிகளில் வெற்றி பெற்றால் போதும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.

இருப்பினும் சிஎஸ்கே சிறந்த வீரர்களை களமிறக்கி இருக்கின்ற எல்லா போட்டிகளிலும் வென்று கோப்பையை வெல்ல அதிகம் ஆர்வம் காட்டி வருகிறது இருப்பினும் ஐபிஎல் தொடரில் இருந்து ஒரு சில சிஎஸ்கே முக்கிய வீரர்கள் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்  உடன் மோதும் போட்டியில் சிஎஸ்கே அணியில் தொடக்க வீரர் ஃபேப் டூபிளெஸ்ஸிக்கு மற்றும் சாம் கரன் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என கூறப்படுகிறது. ஃபேப் டு பிளேசிஸ் கரீபியன் லீக் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாட மாட்டார் அவருக்கு பதிலாக தொடக்க வீரராக ராபின் உத்தப்பா விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் ஏற்கனவே கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடியவர். டிரேடிங் முறையில் உத்தப்பா சிஎஸ்கே வந்தாலும் அனுபவ வீரர் என்பதால் தொடக்க ஆட்கராக விளையாண்டால் சிறப்பாக இருக்கும் என நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அனுபவ வீரர் என்பதால் துவக்க ஆட்டக்காரராக அவர் இறங்கினார் சிறப்பாக இருக்குமென சிஎஸ்கே ரசிகர்களும் தற்போது கூறி வருகின்றனர்.

uthappa
uthappa

Leave a Comment