நயன்தாரா கதாபாத்திரத்தில் ஐயா திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தான்.! இத்தனை வருடம் கழித்து வெளியான புதிய தகவல்.

0

குடும்ப கதாபாத்திரங்களைக் கொண்ட கதைகளை இயக்கிவரும் இயக்குனர்களில் முக்கியமான இயக்குனராக விளங்குபவர் ஹரி இவரது இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஐயா இந்த திரைப்படத்தில் சரத்குமார் நடிப்பு மிக நன்றாக இருப்பது மட்டுமல்லாமல் சரத்குமார் இந்த திரைப் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்ததால் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.

பொதுவாகவே இயக்குனர் ஹரி இயக்கத்தில் எந்த திரைப்படம் வெளியானாலும் அந்த திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றிருக்கும் ஏனென்றால் ஹரி பெரும்பாலும் கிராமத்து கதை களம் கொண்ட திரைப்படங்களைதான் இயக்குவார் அவ்வாறு இவர் இயக்கிய ஐயா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல வசூல் செய்துவிட்டது.

மேலும் இந்த திரைப்படத்தில் சரத்குமாருடன் இணைந்து நயன்தாரா, நெப்போலியன்,வடிவேல்,பிரகாஷ்ராஜ் போன்ற பல சினிமா பிரபலங்கள் நடித்து இருப்பார்கள் இந்நிலையில் நயன்தாரா தமிழில் அறிமுகமான திரைப்படம் இதுதான் என்று கூட கூறலாம் மேலும் இந்த திரைப்படத்தில் நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தை பற்றி தான் தற்பொழுது ஒரு தகவல் கசிந்துள்ளது அதாவது நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில் ஹரி முதலில் மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை நவ்யா நாயர் அவரை தான் நடிக்க வைக்க அணுகினாராம்.

ஆனால் அவர் அப்பொழுது மலையாள திரையுலகில் மிகவும் பிசியாக இருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை இவர் மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை அங்கே உருவாக்கி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

navya-nair
navya-nair

இதனையடுத்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவர்தான் ஐயா திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தவரா என ஆச்சரியப்பட்டு இந்த தகவலை பார்ப்பது மட்டுமல்லாமல் பலரும் இவர் நடித்து இருந்தால் படம் இன்னும் பிரபலமாகி இருக்கும் எனக் கூறி வருகிறார்கள்.