ஆசை படத்தை தவற விட்டதால் தான் இவருக்கு இந்த நிலமை! ஆனால் அஜித்திற்க்கோ சொல்லவா வேண்டும்.

0

தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளிவந்து வெற்றி தோல்வியை அடைகின்றன அப்படி 25 ஆண்டுகள் முன்பு சிறப்பான வெற்றி படத்தை கொடுத்துள்ளார். அஜித் இவர் ஆசை திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார்.

இத்திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. இத்திரைப்படம் இதுவரை 25 ஆண்டுகளை கடந்துருக்கிறது. இதனை அஜித்  ரசிகர்கள் சமூக வலைதளத்திலும் ஹாஷ்டாக் ஒன்றை நிறுவி அதனை மிகப் பெரிய அளவில் வைரலாக்கி வருகின்றனர்.

இத்திரைப்படத்தை இயக்குனர் வசந்த் அவர்கள் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்திற்கு முதலில் பூவெல்லாம் கேட்டுப்பார் என தலைப்பு வைக்கப்பட்டது. பின் அந்த தலைப்பு பிடிக்காததல் கண்டு கொண்டேன் என பெயர் வைக்கப்பட்டது.

அந்த பெயரும் பிடிக்காததால் கடைசியாக ஆசை என பெயர் சூட்டப்பட்டது. அதற்கு ஏற்றார்போல இக்கதையும் அமைந்ததால் இந்த பெயர் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தது. இத்திரைப் படத்தில் அஜித்துடன் இணைந்து சுவலட்சுமி, பிரகாஷ்ராஜ் மற்றும் பல நட்சத்திர பரபலங்கள் நடித்திருந்தனர்.

ஆனால் இயக்குனர் அவர்களோ இப்படத்திற்கு முதலில் சூர்யாவை தான் கமிட் செய்தார். ஆனால் அவரோ அப்பொழுது படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். அதன் பிறகுதான் தல அஜித்தை கமீட் செய்தனர்.