“தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் முதன்முதலில் நடிக்க இருந்தது இவரா.? அட இது தெரியாம போச்சே..

0
theeya-velai-seiyanum-kumaru-
theeya-velai-seiyanum-kumaru-

சினிமா உலகை பொருத்தவரை காமெடி கலந்த படங்களுக்கு எப்பொழுதுமே நல்ல வரவேற்பு இருந்து வந்துள்ளது அந்த வகையில் 2013 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் தீயா வேலை செய்யணும் குமாரு இந்த படம் முழுக்க முழுக்க காமெடி, காதல், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான படமாக இருந்தது.

படம் வெளிவந்து வெற்றி பெற்றது இந்த படத்தில் சித்தார்த்துடன் கைகோர்த்து சந்தானம், பாஸ்கி, ஹன்சிகா, ஆர் ஜே பாலாஜி, கணேஷ் வெங்கட்ராமன், ஐஸ்வர்யா மேனன், டெல்லி கணேஷ், கருணாகரன் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் வெற்றி மூலம் சித்தார்த்துக்கும் சரி நடிகர் சந்தானத்துக்கும் சரி அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் உண்மையில் தீயா வேலை செய்யணும் குமாரு படம் நடிகர் சித்தார்த்துக்கான படமே இல்லையா இயக்குனர் சுந்தர் சி. முதலில் வேறு ஒரு நடிகரை தான் தேர்வு செய்தாராம்.

அந்த நடிகர் வேறு யாரும் அல்ல உதயநிதி ஸ்டாலின் தான் இவர் அண்மையில் வெளிப்படையாக பேட்டி ஒன்றில் சொன்னார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. நடிகர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்திய பேட்டியில் நான் பல படங்களை தவறி விட்டிருக்கிறேன் அதில் ஒரு சில படங்கள் முக்கியமான படங்கள் என கூறினார்.

அந்த வகையில்  தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் நடிக்க முதலில் தனக்கு தான் வாய்ப்பு  வந்தது ஆனால் ராஜேஷ் இது உங்களுக்கு சரி வராது என கூறிவிட்டார் அதனால் அந்த படத்தில் நடிக்கவில்லை என கூறினார். அதேபோலவே தான் தடம் படமும் சில காரணங்களால் தவிர்த்து விட்டேன் என கூறினார்.