ஜெயம் ரவியின் கோமாளி படத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர்தான் இயக்குனர் பரபரப்பு பேட்டி.!

0
comali
comali

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான ஒரு காமெடி கலந்த காதல் திரைப்படம் கோமாளி. இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான்  பிரதீப். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேர்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து பிரதீப் அவர்கள் இயக்கத்தில் லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அது மட்டுமல்லாமல் இந்த படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும் பிரதீப் இயக்கியுள்ள லவ் டுடே திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படம் நவம்பர் 4ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் லவ் டுடே திரைப்படத்திற்காக பிரபல நியூஸ் சேனலில் பேட்டி அளித்துள்ளார் இயக்குனர் பிரதீப். அப்போது பல சுவாரஸ்யமான சில தகவல்களையும் கூறியுள்ளார்.

அதாவது பிரதீப் இயக்கிய முதல் படமான கோமாளி திரைப்படத்தில் முதலில் ஜெயம் ரவிக்கு பதிலாக நடிக்க இருந்தது வேற ஒரு நடிகர் என்று கூறியுள்ளார் அதாவது தமிழ் சினிமாவில் நடன ஆசிரியராகவும் இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்துவரும் நடிகர் பிரபுதேவா அவர்கள் தான் முதலில் கோமாளி திரைப்படத்தில் நடிக்க இருந்தார்.

ஆனால் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக கோமாளி படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனது அதன் பிறகு தான் நடிகர் ஜெயம் ரவியிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது அதன் பிறகு ஜெயம் ரவியும் இந்த படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டார் அதன் பிறகு தான் கோமாளி படத்தில் ஜெயம் ரவி நடித்தார் என்று இயக்குனர் பிரதீப் கூறியுள்ளார்.