கில்லி படத்தில் விஜய்க்கு பதிலாக இவர் தான் நடிக்க இருந்தார்.! நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்!!

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் இவர் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் கில்லி. இப்படம் விஜய் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. இப்படம் மக்கள் மத்தியிலும் மற்றும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேர்ப்பைப் பெற்றது.

அதுமட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி அடைந்தது. இப்படம் தெலுங்கில் முன்னணி நடிகரான மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த ஒக்கடு என்ற திரைப்படத்தின் ரீமேக் படம் தான் கில்லி.இப்படம் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக உருவாகியது.இப்படம் ஆரம்பத்தில் ரீமேக் என எல்லோரும் கூறிவந்தனர். அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் விஜய் அவர்கள் இப்படத்தில் கமிட்டாகி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மிகப் பெரிய வெற்றிப் படமாக மாற்றி கொடுத்தார்.

ஆனால் இப்படம் விஜய்க்கு முன்னதாக ”சியான் விக்ரம்” இடம் சென்றதாம். அவர் மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் அந்த படம் அவரைவிட்டு கைநழுவி போனது என்கிறார்கள். இதனையடுத்து தளபதிக்கு தான் கதை பொருத்தமாக இருக்குமென தரணி அவர்கள் எடுத்தார்.இந்த படத்தில் விஜய் அவர்கள் எந்த ஒரு சீனாக இருந்தாலும் ஒரே டேக்கில் முடிப்பார் என கோபிநாத் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

Vikram
Vikram

கோபிநாத் அவர்கள் விஜயுடன் இணைந்து கில்லி, குருவி, வேட்டைக்காரன் போன்ற பல படங்களில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment