முன்ன எல்லாம் கூப்பிட்ட வரவே மாட்டான் – இப்ப உடனே வாரன்.! நல்லா நடிக்கிறான் ஆளே மாறிட்டான் பிரபல நடிகரை புகழ்ந்து பேசிய விஷால்.!

0
vishal-
vishal-

நடிகர் விஷால் தற்போது எனிமி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது இந்த படத்துடன் அண்ணாத திரைப்படம் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணாத்த படம் பெரும்பாலான தியேட்டர்களை கைப்பற்றி உள்ளது இருந்தாலும் எனிமி திரையரங்கில் வெளிவந்து போதும் என்பதில் உறுதியாக இருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் எனிமி படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது. அப்போது பேசிய நடிகர் விஷால். இந்த படம் மிக சூப்பராக வந்திருக்கிறது. இந்த படத்தை தயாரித்த வினோத்குமார் சிறந்த தயாரிப்பாளர் காசை பார்க்காமல் படத்தின் கதைக்கு ஏற்றவாறு வழங்கியுள்ளார் நான் என்று பயப்படாமல் வீட்டுக்கு செல்கிறேன் என்றால் அதற்கு தயாரிப்பாளர்தான் காரணம்.

பழகும் விதம் மிகவும் அருமையாக இருக்கு மேலும் அவருடன் ஒரு படம் பண்ண இருக்கிறேன் என கூறியுள்ளார் விஷால். தயாரிப்பாளர் வினோத்குமார் நினைத்திருந்தால் இந்த திரைப்படத்தை OTT தளத்திற்கு விற்று இருக்கலாம் ஆனால் ரசிகர்கள் இந்தப் படத்தைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக தீபாவளி அன்று வெளியிட இருக்கிறார் அதற்கு ஒரு பாராட்டு என கூறினார்.

ஆனந்த் சங்கர் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். அவரது கற்பனையே இந்த திரைப்படமாக உருவாகியுள்ளது இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் சொல்லும்போது ஆர்யா இருந்தால் சிறப்பாக இருக்கும் என சொன்னார் நானும் உடனடியாக அவரை அழைத்தேன் ஆரிய கதாபாத்திரம் இன்னும் வலுவாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என உடனே சொல்ல உடனே வில்லன் கதையை சற்று மாற்றி அமைத்து சிறப்பான கதையை கொடுத்து உள்ளார்.

இந்த படம் நிச்சயம் ஹிட் அடிக்கும் என விஷால் கூறினார் மேலும் ஆர்யாவை பற்றியும் அவர் பேசியுள்ளார்.  நடிகர் ஆர்யா முன்புபோல் இல்லை இப்பொழுது நிறைய மாற்றம் தெரிகிறது முன்பு உலகமே அழியப் போகிறது என்று சொன்னால் கூட சைக்கிளிங் முடியப்போகிறது முடித்துவிட்டு வருகிறேன் எனக் கூறுவார். இப்பொழுது நல்ல நடிக்க தொடங்கிவிட்டான் சார்பட்டா பரம்பரை படத்தில் குத்துச் சண்டையை மையப்படுத்தி வந்திருந்தது.

அதற்காக உண்மையாகவே தன்னை அர்ப்பணித்து உண்மையான குத்துச் சண்டை வீரன்னாக மாறினார். எனிமி படத்தில் ஒரு சண்டைக் காட்சிக்கு உண்மையாகவே என்னை அடித்து விட்டான் என கூறினார் விஷால். நானும் ஆர்யாவும் இதற்கு முன்பு அவன் இவன் திரை படத்தில் நடித்திருந்தாலும் அது போல இந்த படமும் ஒரு சூப்பர்ஹிட் படமாக அமையும் என விஷால் கூறினார்.