23 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டாரா.? விளக்கம் தந்த பப்லு..

சினிமாவை பொறுத்தவரை திருமணம் என்பது அவர் அவர்களுடைய விருப்பம் மேலும் அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொள்பவர்களும் இருக்கிறார்கள் அந்த வகையில் சமீபத்தில் நடிகர் பப்லு மலேசியாவைச் சேர்ந்த 23 வயது பெண்ணை சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் இதற்காக பலரும் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறிய வருகிறார்கள்.

மலேசியாவில் தொழில் தொடங்க பப்ளுக்கு அந்தப் பெண் உதவி புரிந்ததாகவும் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் பேசப்பட்டு வந்தது மேலும் சர்ச்சைக்குரிய பல தகவல்கள் வைரலாகி வந்த நிலையில் தற்பொழுது பப்லு அதற்கு விளக்கம் அளித்து இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது திருமணம் செய்து கொண்டதாக பலர் போன் போட்டு கேட்கிறார்கள்.

திருமணம் செய்யப் போகிறேன் ஆனால் இப்பொழுது இல்லை அது பற்றி யோசிக்கவே இல்லை என எத்தனை பேரிடம் விளக்கம் சொல்வது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கை என தனித்தனியாக வைக்க வேண்டுமென நினைப்பவன் நான் சினிமாக்காரர்களுக்கு ஒரு கெட்ட பெயர் உள்ளது. புருஷன் பொண்டாட்டி சண்டை போட்டால் கூட மீடியாவில் வந்து சண்டை போடுகிறார்கள்.

ஒருவரை பற்றி ஒருவர் தப்பாக பேசுவது என இருக்கிறார்கள் இதனால் எல்லா சினிமாக்காரர்களும் அப்படித்தான் என்ற பெயர் இருக்கிறது நான் எனது தனிப்பட்ட வாழ்க்கையை பிரைவேட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என எவ்வளவு முயற்சி செய்து பார்க்கிறேன் ஆனால் விடமாட்டேன் என்கிறார்கள் நான் ஏதாவது செய்தால் அதனை வெளிப்படையாக செய்பவன் உங்கள் எல்லோருக்கும் தெரிந்து உங்கள் ஆசிர்வாதத்துடன் தான் பண்ணுவேன் திருட்டுத்தனமாக எதுவும் செய்யவில்லை என கூறியுள்ளார் பப்லு.

இவ்வாறு நடிகர் பப்லுக்கு 50 வயதிற்கு மேல் ஆகும் நிலையில் 23 வயது இளம்பெண்ணை திருமணம் செய்ய செய்திருப்பதாக வந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரிது அதிர்ச்சியை ஏற்படுத்தியது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகர் பப்லு தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment