வலிமை படத்தில் இவரா வில்லன் மிரண்ட திரை பிரபலங்கள்?விவரம் இதோ!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் இவருக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அஜீத் இப்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா மற்றும் தயாரிப்பாளரான போனி கபூர் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

வலிமை படத்தில் அஜித்துக்கு ஹீரோயின் மற்றும் வில்லன் யார் என்றும் தெரியவராத நிலையில் திடிரென இப்படத்தில் நடிகர் பிரசன்னா அஜித்திற்கு வில்லனாக நடிபார் என தகவல் வெளிவந்த நிலையில் அவரே இல்லை என கூறியுள்ளார். இந்த நிலையில் ஹாலிவுட் நடிகரான சஞ்சய் தாத் இப்படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஏனென்றால் போனி கபூரின் வேண்டுகோளுக்கிணங்க சஞ்சய் தத் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. ஆனால் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றும் சொல்லப்பட்டு வருகிறது.இன்னும் இப்படத்தின் ஹீரோயின் யார் என்றும் தெரியவில்லை மற்றும் முன்னணி கதாபாத்திரங்களில் யார் யார் நடிக்கிறார்கள் என்றும் தெரியவில்லை.

வலிமை படம் சஸ்பென்ஸ் ஆகவே எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் சஞ்சய் தத் அஜித்துக்கு வில்லனாக நடித்தால் மிரட்டலாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

sanjay-dutt

Leave a Comment