விஜய் சேதுபதி எடுத்த புதிய அவதாரம்.! இயக்குனர் யார் தெரியுமா.?

vijay sethupathy
vijay sethupathy

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வந்த நிலையில் சமீப காலங்களாக வில்லனாகவும் நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் ஹீரோவை விட வில்லன் கேரக்டர் தான் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

எனவே தொடர்ந்து இவருக்கு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அப்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். மேலும் இன்னும் சில திரைப்படங்களிலும் வில்லனாக நடித்திருக்கும் இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு போன்ற பிறமொழி திரைப்படங்களிலும் நடித்து பிசியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவருடைய நடிப்பில் விடுதலை திரைப்படம் வெளியானது. அதாவது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக விடுதலை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி சில வாரங்களாக திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வரும் நிலையில் வசூல், ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் விஜய் சேதுபதியின் மகன் வெப் சீரியலில் நடித்திருப்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நரு நாராயணன் மற்றும் மகா கீர்த்தி, அரவிந்த் ராஜ் ஆகியோர்களின் இயக்கத்தில் பள்ளி பருவ நாட்களை மையமாக வைத்து உருவாகியுள்ள புதிய இணைய தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி என் மகன் சூர்யா நடித்துள்ளார்.

இதற்கு முன்பு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்ற நானும் ரவுடிதான், சிந்துபாத் போன்ற திரைப்படங்களில் விஜய் சேதுபதியுடன் இணைந்து சூர்யா நடித்திருந்த நிலையில் தற்பொழுது புதிய வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.