ஆஸ்கார் வரை சென்ற 7 திரைப்படங்களில் நடித்த ஒரே தமிழ் நடிகர் இவர்தான்.. அட இவர் நடிப்பு அரசனாச்சே..

oscar
oscar

ஆஸ்காருக்கு அனுப்பப்பட்ட ஏழு திரைப்படங்களில் நடித்த முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை பிரபல தமிழ் நடிகர் கமலஹாசன் பெற்றுள்ளார்.

உலகநாயகன் கமலஹாசன் தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்டவர் சிறந்த நடிகர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. அவர் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், நடன கலைஞர், பாடல் ஆசிரியர், திரைக்கதை எழுத்தாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பல பரிணாமங்களில் சினிமாவில் பணியாற்றியுள்ளார்.

தமிழை தாண்டி மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி என பல மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் தனது நடிப்பு திறமைக்காகவே தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷன் என பல விருதுகளை வென்றுள்ளார். அதேபோல் சர்வதேச அளவில் பல விருதுகளுக்கு அவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார் அந்த வகையில் உயரிய அங்கீகாரம் பெற்ற ஆஸ்கார் விருது அவரின் பல திரைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதுக்காக கமலஹாசன் பரிந்துரைக்கப்படவில்லை என்றாலும் அவரது ஏழு திரைப்படங்கள் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் பிரிவில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது அந்த வகையில் ஆஸ்காருக்கு அனுப்பப்பட்ட ஏழு திரைப்படங்களில் நடித்த முதல் இந்திய நடிகர் தமிழ் நடிகர் என்ற பெருமையை கமலஹாசன் அடைந்துள்ளார்.

நாயகன் : மணிரத்தினம் யக்க்தில் கமலஹாசன், சர்யா, நாசர், டெல்லி கணேஷ், என பல நடிகர்கள் நடித்துள்ள திரைப்படம் நாயகன் இந்த திரைப்படம் மும்பையில் அண்டர் வேர்ல்ட் தாதா வரதராஜன் முதலியாரை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

தேவர் மகன்: தேவர் மகன் திரைப்படத்தை இன்று வரை யாரும் மறந்திருக்க மாட்டார்கள் பரதன் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளியாக்கிய இந்த திரைப்படம் கமலஹாசன் சிவாஜி கணேசன் நாசர், கௌதமி, ரேவதி ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இந்த திரைப்படம் கமலஹாசனின் வெற்றி திரைப்படத்தில் ஒன்று.

குருதிப்புனல்: பி சி ஸ்ரீராம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் குருதிப்புனல். இந்த திரைப்படம் 1995 ஆம் ஆண்டு ஆக்சன் திரில்லர் திரைப்படமாக உருவானது கமலஹாசன் நாசர் அர்ஜுன் கௌதமி ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

இந்தியன்: 1996 ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் இந்தியன் இந்த திரைப்படத்தில் கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் சுகன்யா மனிஷா கொய்ராலா ஆகியோர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

ஹேராம்: 2000 ஆண்டு கமலஹாசன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது ஆனால் இந்த திரைப்படத்தில் கமலுடன் இணைந்து ராணி முகர்ஜி, ஷாருக்கான், வசுந்தரா தாஸ் ஆகியவர்கள் நடித்திருந்தார்கள் தமிழ், ஹிந்தி என இரு மொழிகளிலும் இந்த திரைப்படம் வெளியிடப்பட்டது வசூல் ரீதியாக பெரிதாக இல்லை என்றாலும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது.