எனக்கு பண உதவி கொடுத்து உதவும் ஒரே ஹீரோ இவர் தான்..! சிம்பு இல்லை.?

cool-suresh
cool-suresh

சினிமா உலகில் அறிமுக நடிகர்கள் பலரும் தனது படத்தை புரொமோட் செய்ய அயராது உழைப்பதை நாம் பார்த்திருப்போம் ஆனால் ஒரு காமெடி நடிகர் தான் நடிக்காத படத்திற்கு கூட தொடர்ந்து ப்ரோமோஷன் செய்து அசதி உள்ளார் அந்த பிரபலம் வேறு யாரும் அல்ல கூல் சுரேஷ் தான்..

இவர் தமிழ் சினிமா உலகில் பல படங்களில் காமெடியனாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து ஓடுகிறார் இவர் சிம்புவின் நெருங்கிய நண்பர் இவர் தொடர்ந்து சிம்பு படங்களுக்கு ப்ரொமோட் செய்வது வழக்கம் அந்த வகையில் வெந்து தணிந்தது காடு படத்திற்காக தொடர்ந்து ப்ரோமொட் செய்து வருகின்றார்.

வெந்து தணிந்தது காடு படம் மக்கள் மத்தியில் ரீச் ஆக இவரும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது ஏனென்றால் இவர் வெந்து தணிந்தது காடு படத்திற்கு முன்பாக எந்தெந்த படங்கள் எல்லாம் வந்ததோ அந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்து அந்த படத்தைப் பற்றி சொல்கிறாரோ இல்லையோ வெந்து தணிந்தது காடு படத்தை பற்றியும் ப்ரொமோட் செய்து வந்தார்.

இவர் இப்போது படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இவ்வளவு ஜாலியாக இருக்கிறார் எப்படி இவர் சம்பாதிக்கிறார் என பலரும் கேட்டு வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் கூல் சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் உரையாற்றினார் அப்பொழுது  வெந்த தணிந்தது காடு படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது என கூறினார்.

மேலும் பேசிய அவர் எனக்கு வருமானம் என்ன என பலரும் கேட்கின்றனர் தற்பொழுது வரையில் நண்பர் சந்தானம் தான் என்னை பார்த்துக்கொள்கிறார் என்னை பற்றி யாராவது சந்தானத்திடம் தவறாக கூறினால் கூட அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார். எனக்கு உதவி செய்வது ஒரே இடம் தான் அதையும் பார்த்து சிலர் பொறாமைப்படுகிறார்கள் என கூல் சுரேஷ் கூறினார்.