ஹஷிம் அம்லாவை கதறவிட்ட ஒரே ஒரு பந்து வீச்சாளர் இவர்தானாம் – அவர் ஒத்துக்கொண்ட உண்மை.? அந்த பந்துவீச்சாளர் யார் தெரியுமா.?

தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் தொடக்க வீரரான ஹசிம் அம்லா பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி திக்குமுக்காட செய்வதில் இவரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை எந்த சூழ்நிலையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கூடியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது தென்ஆப்பிரிக்க அணியில் விளையாட வில்லை என்றாலும் அந்த அணிக்காக பல்வேறு சில விஷயங்களை கொடுத்தும்,சொல்லியும் வருகிறார். இந்த நிலையில் ஹசிம் அம்லா நான் எதிர்கொண்ட பந்துவீச்சாளர்களிலேயே சிறந்த பந்து வீச்சாளர் இவர்தான் என ஒரு பாகிஸ்தான் வீரரை புகழ்ந்து பேசியுள்ளார் அதில் அவர் கூறியது.

நான் பல சிறந்த பந்து வீச்சாளர்களை சமாளித்து உள்ளேன் ஆனால் என்னையே திக்குமுக்காட வைத்தார் ஒரு பந்து வீச்சாளர் தான் அவர் வேறு யாரும் அல்ல பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிப் என கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசியது முகமது ஆசிப் பந்து வீசும் வித்தைகாரர் அவர் ஒரு மந்திரவாதி அவருடைய பந்துவீச்சை பார்ப்பதற்கு மிக அற்புதமாக இருக்கும் ஆனால் அதை எதிர்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது மிகப்பெரிய சிக்கலாக அமைந்துவிடும். ஆசிப்பின் பந்துவீச்சு எதிர் கொள்வதற்கு மிகவும் கடினமானது.

asif
asif

அவர் இன்ஸ்விங் விசப்போகிறார் என்று நான் நினைத்து தயாராக இருப்பேன் ஆனால் பந்து அவுட்சிங் ஆகி அவுட்டாகி விடுவேன் அதேபோன்று அவுட்ஸ்சிங் என நினைத்துக்கொண்டு இருப்பேன் ஆனால் அந்த பந்து இன்ஸ்விங் ஆகிவிடும் அவுட் ஆகி விடுவேன் என அவர் கூறியுள்ளார். ஆசிப் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என புகழ்ந்து பாராட்டினார்.

Leave a Comment