தளபதி விஜயுடன் நேருக்கு நேர் மோதி 3 முறை வெற்றிகண்ட ஒரே நடிகர் இவர் தான்.! அஜித் கிடையாது.?

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய். பல டாப் ஹீரோக்களின் படங்களுடன் நேருக்கு நேர் மோதி வெற்றிகண்டு இருக்கிறார் குறிப்பாக அஜித், ரஜினி, கமல் போன்ற பல்வேறு டாப் நடிகர்களுடன் மோதி இருக்கிறார் அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். இப்படிபட்ட தளபதி விஜய்   90 களில் பிரசாந்த் உடன் நேருக்கு நேர் மோதி மூன்று தடவை தோல்வி படங்களை சந்தித்திருக்கிறார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

மின்சார கண்ணா : கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆண்களை வெறுக்கும் குஷ்பு மனதில் எப்படி இவர் இடம் பிடித்து நல்ல பெயர் வாங்குகிறார் என்பது மேலும் படத்தில் பல சுவாரசியங்கள் இருக்கும் இந்த படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது.

இந்த படத்தை எதிர்த்து அதே நேரத்தில் வெளியான பிரசாந்தின் “ஜோடி” திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி, சென்டிமென்ட், காதல் என அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான படமாக இருந்ததால் ரசிகர்களின் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில்  படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மூலம் மின்சார கண்ணா படத்தை பீட் பண்ணி வெற்றி கண்டது ஜோடி.

நிலவே வா  : ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 1998 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நிலவே வா இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து சுவலட்சுமி போன்றவர்கள் நடித்திருக்கின்றனர் இந்த படம் முழுக்க முழுக்க வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் எப்படி திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்பதை அப்பட்டமாக எடுத்துக் காட்டி இருக்கும் ஆனால் இந்த படம் வெளிவந்து எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை..

இந்த படத்தை எதிர்த்து ரிலீசான “கண்ணெதிரே தோன்றினாள்” திரைப்படம் அப்பொழுது வெளிவந்து பிளாக்பஸ்டர் அடித்தது இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்திருந்தது மேலும் படம் சூப்பர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நினைத்தேன் வந்தாய் : இந்தப் படத்தில் ரம்பா, தேவயானி போன்ற டாப் பிரபலங்கள் நடித்திருப்பார்கள் முதலில் விஜய் கனவில் வரும் ஒரு பெண்ணைத் தான் தேடிக் கொண்டிருப்பார் ஆனால் குடும்பத்தில் இருப்பவர்கள் தேவயானி பெண் பார்க்க அழைத்து செல்வார்கள் கடைசியில் விஜய் யாருடன் சேர்ந்தார் என்பதை படமாக எடுத்திருக்கின்றனர். இந்த படத்தில் காமெடி, சென்டிமென்ட் அனைத்தும் சூப்பராக இருக்கும். வெளிவந்து சுமாரான வெற்றியை பெற்று தந்தது.

ஆனால் இந்த படத்தை எதிர்த்து வெளியான பிரசாந்தின் “ஜீன்ஸ்” திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இந்த படத்தில் வரும் பாடல்கள் இப்பொழுதும் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்த பாடல் ஆகும்.

Leave a Comment

Exit mobile version