சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் லவ் டுடே. முதன்முறையாக இந்த திரைப்படத்தில் பிரதீப் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் இவருக்கு ஜோடியாக நடிகை இவனா நடித்திருந்தார் இப்படிப்பட்ட நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வெற்றியை பெற்றுள்ளது.
அதோடு மட்டுமல்லாமல் ஏராளமான புதுமுக பிரபலங்கள் இணைந்து நடித்திருந்த நிலையில் இதுபோன்று முதன்முறையாக புது முக பிரபலங்கள் நடித்து இந்த அளவிற்கு வெற்றி பெற்ற திரைப்படம் இதுவே ஆகும். எனவே ஏராளமான பிரபலங்கள் பிரதீப் ரங்கநாதனுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள்.
அதோடு மட்டுமல்லாமல் நடிகர் ரஜினிகாந்த், விஜய் போன்றவர்களும் நேரில் சந்தித்து பாராட்டைப் பெற்றார். இப்படிப்பட்ட நிலையில் பிரதீப் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களை வைத்து தன்னுடைய அடுத்தடுத்த திரைப்படங்களை இயக்க இருக்கிறார். அந்த வகையில் நடிகர் விஜய்யை சந்திக்கும் பொழுது அவரிடம் கதை சொன்னதாகவும் அது விஜய்க்கு மிகவும் பிடித்ததாகவும் கூறினார்.
இவ்வாறு லவ் டுடே திரைப்படத்தின் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் மிகப்பெரிய லாபத்தை பார்த்துள்ளது வெறும் ஐந்து கோடி பொருட்ச அளவில் உருவான லவ் டுடே திரைப்படம் 70 கோடிக்கு மேல் வசூல் செய்த சாதனை படைத்தது. இதன் காரணமாக தயாரிப்பாளர்களும் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நெருங்கி வருகிறார்கள். இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் தான் இவனா.
இதற்கு முன்பு இவர் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியினை தந்துள்ளது இதன் காரணமாக சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து ஏராளமான தனியார் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இவனா மற்றும் லவ் டுடே திரைப்படத்தில் மாமா கூட்டி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் இவர்களோடு நடிகையின் பாய் பெஸ்டியாக நடித்திருந்த அஜீத் போன்றவர்கள் கலந்துகொண்டு திரைப்படத்தின் அனுபவங்கள் பலவற்றையும் பகிர்ந்திருந்தார்கள் பிறகு விஜயின் ரஞ்சிதமே பாடலுக்கு மூன்று பேரும் இணைந்து நடனமாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
https://youtu.be/kNoBWBuWz7s