இந்திய அணியில் ஜடேஜாவின் இடத்தை நிரப்ப சரியான ஆள் இவர்தான் – ரோகித் சர்மா கணிப்பு.!

0
rohit-
rohit-

இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் நடந்த ஆசிய கோப்பையில் இறுதி போட்டிக்கு நுழையாமலேயே வெளியேறியது இது இந்திய முன்னாள் அணி வீரர்கள் மற்றும் ரசிகர்களை பெரிதும் கோபமடைய செய்தது நல்ல வீரர்கள் இருந்தும் ஏன் இறுதி போட்டிக்கு தகுதி பெறவில்லை என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.

இதை தொடர்ந்து இந்திய அணி அடுத்ததாக சவுத் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் விளையாட இருக்கிறது அதன் பின் 20 ஓவர் உலகக்கோப்பைபிலும்  களமிறங்க இருக்கிறது. இப்பொழுது இந்திய அணியில் ஒரு சில முக்கிய நட்சத்திர பந்துவீச்சாளர்கள் திரும்பி உள்ளனர்.

இது இந்திய அணிக்கு பலமாக இருந்தாலும் ஜடேஜா போன்ற ஒரு ஆள் ரவுண்டார். தற்போது இல்லாமல் இருப்பது பலருக்கும் வருத்தத்தை கொடுக்கிறது.  தற்பொழுது காயம் காரணமாக அவர் ஆஸ்திரேலியா சவுத் ஆப்பிரிக்கா மற்றும் 20 ஓவர் உலகக்கோப்பை போன்ற போட்டிகளில் அவர் கலந்து கொள்ள மாட்டார்.  யார் நிரப்புவார் என்பது மிகப்பெரிய ஒரு கேள்விக்குறியாக இருந்து வந்த..

நிலையில் தற்போது அவருக்கு பதிலாக அச்சர் பட்டியலை இந்திய அணி தேர்வு செய்துள்ளது இது குறித்து ரோகித் சர்மா பேசி உள்ளது. நட்சத்திர ஆள் ரவுண்டர்  ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய ஒரு பின்னடைவு தான் ஆனால் அவர் இல்லாத பட்சத்தில் அவரது இடத்தை நிரப்ப சரியான ஆள் அக்சர் பட்டேல்  தான் அவர் இந்திய அணிக்காக தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

ஏன் கடந்த வெஸ்ட் இண்டீஸ் அணி உடனான போட்டிகளில் நல்ல ரன்கள் அடித்தார் விக்கெட்டுகளையும் எதிர்பார்த்த அளவுக்கு எடுத்து கொடுத்தார் அவரிடம் நல்ல அனுபவம் இருக்கிறது அவர் ஜடேஜாவின் இடத்தை பூர்த்தி செய்வார். எங்களுக்கு தேவையானதை அவர் கொடுப்பார் என நம்புகிறோம் என ரோகித் சர்மா கூறி உள்ளார்.