உத்தமபுத்திரன் படத்தில் விவேக் சாரை ****** என்று சொல்ல அவர் தான் காரணம் .! அது என்னால் மறக்க முடியாது.! பழைய விஷயங்களை பகிர்ந்த மாஸ்டர் பரத்.

சினிமா உலகில் இருந்து கொண்டு சத்தமே இல்லாமல் தன்னால் முடிந்த பல நலத்திட்ட உதவிகளையும், மக்களுக்காக சேவையும் செய்து வந்தவர் நடிகர் விவேக். இப்படிப்பட்ட ஒரு நடிகரை கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி இழந்தது.

இச்செய்தியை தமிழ் சினிமாவையும் தாண்டி தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது.மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதை முன்னின்று அதை எப்படி தடுக்க வேண்டும் என்பதை சொல்லி அவர்களுக்கு நல்லதொரு வழியைக் கட்டியவர் மேலும் சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.

இனிமேல் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு நபரை எப்போதும் பார்க்க முடியாது என்பது பலரின் ஏக்கமாக இருக்கிறது. இப்படிபட்டவரின் இறப்பை ஒரு சிலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் ஒரு சில வரமுடியாத சுழலால் அவருடன் பணியாற்றிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றை வெளியீட்டை பழைய நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் மாஸ்டர் பரத் விவேக் சார் அவர்களின் நினைவைப் பற்றி தற்போது பகிர்ந்து உள்ளார்.தமிழ் சினிமாவில் 2002 ஆம் ஆண்டு பஞ்சதந்திரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மாஸ்டர் பரத்.

அதில் தொடங்கி அதன் பிறகு போக்கிரி, வின்னர் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தினார் கடைசியாக இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படத்திலும் உடல் எடையை குறைத்து பிட்டாக நடிப்பு ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப் போயிருந்தார்.

இப்படி பல்வேறு திரைப் படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது என்னவோ “உத்தமபுத்திரன்” திரைப்படம் தான் இந்த திரைப்படத்தில் அவரும் விவேக்கின் காமெடி வேற லெவல் இருந்தது.

இந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் நான் அவரை போடா போடா என்று திட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

எனக்கே ஒரு மாதிரியாக இருந்தது ஆனால் விவேக் அவர்களோ கதையின்படி அப்படி சொல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதால் அந்த சின்ன பையனை சொல்ல அனுமதி அளித்தார் பின் அவர் அந்த சொன்ன காட்சிகள் படத்தில் வரும் மிகப்பெரிய அளவில் கைதட்டல் வாங்கியது.

விவேக் நினைத்திருந்தால் அந்த சீனில் நடிக்காமல் உதறி தள்ளி இருக்கலாம் ஆனால் சினிமாவில் பொருத்தவரை மக்களை மகிழ்விக்க வேண்டும் அதை எப்படி வேண்டுமானாலும் கொண்டு வரலாம் என்பதற்கு உதாரணம் இது.

Leave a Comment