நடிகை ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்ளவது இவரா..? புகைப்படம் இதோ..

சினிமா உலகில் இருக்கும் நடிகர், நடிகைகள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை என்ஜாய் பண்ணுகின்றனர் அப்படி விக்கி நயன்தாரா, காஜல் அகர்வால் ஆகியவர்களை தொடர்ந்து பல சினிமா நடிகர்கள் கல்யாணம் செய்து கோளாக்கலமாக வாழ்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ஹன்சிகா எப்பொழுது திருமணம் செய்து கொள்வார் என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.

ஹன்சிகா தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை இவர் எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் சூப்பராக நடிக்கிறார் அதனாலயே இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயருகிறது தமிழில் இவர் விஜய், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற டாப் நடிகர்களுடன் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார்  மேலும் சோலோ படங்களிலும் நடிக்கிறார்.

இப்படி ஓடிக் கொண்டிருக்கும் இவர் கடைசியாக தமிழில் மஹா என்னும் திரைப்படத்தில் நடித்தார் அந்த படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டாலும் படம் சுமாரான வசூலை அள்ளியது. இப்படி ஓடினாலும் மற்ற நடிகைகள் போல நீங்களும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது ரசிகரின் கேள்வியாக இருந்தது தற்பொழுது அதற்கு பதிலும் கிடைத்துள்ளது..

வருகின்ற டிசம்பர் 4ஆம் தேதி அவரது திருமணம் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது வருங்கால கணவர் பற்றிய விவரம் பெரிதாக தெரியவில்லை ஆனால் ஹன்சிகாவின் நீண்ட நாள் நண்பரும் பிசினஸ் பார்ட்னர்மான Sohail kathuria என்பவரை தான் திருமணம் செய்து கொள்கிறாராம்..

hansika

அவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த சில வருடங்களாக ஒரு ஈவன் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது வரும் டிசம்பர் இரண்டாம் தேதி முதல் நான்காம் தேதி வரை இவர்களது திருமண விழா நடைபெற இருக்கிறது இது பற்றிய அறிவிப்பை ஹன்சிகாவே வெகு விரைவில் அறிவிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version