சம்பள விஷயத்தில் இவர்தான்- ரஜினி, விஜய்க்கு எல்லாம் சீனியர்.! தமிழ் சினிமாவை இவர் பல வருடங்களா கட்டி ஆண்டுவுள்ளார்.! யாரு சாமி அது.

0

இன்றைய சினிமா உலகில் தொடர் ஹிட் படங்களை கொடுக்கும் டாப் நடிகர்கள் தனது சம்பளத்தை அதிகரித்துக் கொண்டு செல்கின்றனர். ஹீரோக்கள் தான் இப்படி என்றால் படத்தில் முக்கிய ரோல்களில் நடிக்கும் காமெடியன் மற்றும் குணச்சித்திர நடிகர்களும் தற்போது தனது சம்பளத்தை சைலண்டாக உயர்த்தி வருகின்றனர்.

இப்போதைய காலகட்டத்தில் ஒரு நடிகரோ அல்லது நடிகையை பிரபலம் அடைந்து விட்டால் தனது சம்பளத்தை உயர்த்திக் கொள்கின்றனர் அதற்கு ஏற்றார் போல் சினிமாத் துறையையும் அவர்களுக்கு காசுகளை கொட்டிகொடுக்க ரெடியாக இருக்கிறது.

இவர்களுக்கு முன்பே தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்திக் காட்டியவர் முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான எம்ஜிஆர் தான். அவர் கடைசி படங்களுக்காக அதிக ஊதியத்தை பெற்றுள்ளார் என கூறப்படுகிறது.

அந்த வகையில் எம்ஜிஆர் கடைசியாக ஒளி விளக்கு என்ற திரைப்படத்திற்காக 5 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளார் அதை தொடர்ந்து நம்நாடு படத்திற்காக இவர் பெற்ற ஊதியம் 8 லட்சம் ரூபாய்தான். இப்போது வேண்டுமானால் இது கம்மியாக இருக்கலாம் என்பது 80,90 காலகட்டங்களில் 8 லட்சம் என்பது மிகப்பெரிய ஒரு தொகையாக பார்க்கப்பட்டது.

இப்பொழுது வேண்டுமானால் ரஜினி, விஜய் ஆகியோர் 100கோடி வாங்குகிறார்கள் இவர்களை தொடர்ந்து அஜித் ஒரு படத்திற்காக 50 கோடி சம்பளம் வாங்குகிறார் ஆனால் சம்பளம் அதிகமாக மாறினாலும் அஜித்திற்கும், எம்ஜிஆருக்கும் ஒரு சில ஒற்றுமைகள் சினிமாவில் இன்றும் உள்ளது.

இவர்கள் இருவருமே ஒரு படத்தை முடித்து விட்ட பிறகுதான் அடுத்த படத்தில் கமிட் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இது எம். ஜி. ஆர்,அஜித்துக்கும் உள்ள ஒற்றுமை.