விஜய், ரஜினி உடன் நடிச்சாச்சு அடுத்த டார்கெட் இவர் தான் – தனது விருப்பத்தை சொன்ன நடிகர் அபிமன்யு சிங்.

0
animanyu-singh
animanyu-singh

சினிமா உலகில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்-நடிகைகள் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றி சிறந்த படங்களை கொடுப்பது வழக்கம். அந்த வகையில் வில்லன் கதாபாத்திரங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் அபிமன்யு சிங்.

இவர் சமீபகாலமாக சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் இவரது ரோல் மிக சிறப்பாக இருக்கிறது இதுவரை அவர் தமிழில் 10 என்றதுகுள்ள, தீரன் அதிகாரம் ஒன்று, விஜயுடன் ஒரு படம்,  ரஜினி உடன் தற்போது அண்ணாத்த ஆகிய படங்களில் நடித்து அசத்தி இருந்தார்.

இப்படி சினிமா உலகில் வெற்றி நடை கண்டு வரும் அவருக்கு தமிழ் தாண்டி மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பு இருப்பதால் தொடர்ந்து தனது திறமையை வெளிக்காட்டி ஓடிக் கொண்டிருக்கிறார் மேலும் பல்வேறு படங்களைக் கையில் வைத்திருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அபிமன்யு சிங் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது அவரிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அதில் ஒன்றாக தமிழில் நீங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய்், கார்த்தி, விக்ரம் போன்றவர்களுடன் நடித்து முடித்து விட்டீர்கள் அடுத்ததாக யாருடன் கைகோர்க்க ஆசைப்படுகிறீர்கள் என கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அவர் நான் இதுவரை அஜித்துடன் நடிக்க வில்லை அவருடன் ஏதாவது ஒரு படத்தில் நடித்தால் எனக்கு ரொம்ப சந்தோஷம் என கூறி உள்ளார் இதுவே எனது விருப்பமாகவும் இருக்கிறது. இதை அறிந்த ரசிகர்கள் உங்களது திறமைக்கு நிச்சயம் நீங்கள் தல அஜித்துடன் எனக்கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.