ரஜினிக்கு அடுத்தபடி இவர் தான் சூப்பர் ஸ்டார்.! அஜித்,விஜய் இல்லிங்கோ. இந்த மனுஷன் தானாம்.! புகழ்ந்து தள்ளும் இயக்குனர்.

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகர் என்கிற அந்தஸ்தை சூப்பர் ஸ்டார் ரஜினி சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக வைத்து வருகிறார் இந்த இடத்தை பிடிக்க தற்போது அஜித் விஜய் இருவரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் அவர்களை தள்ளி விட்டு மூன்றாவது ஒருவராக நடிகர் விஜய் சேதுபதி அந்த இடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சினிமா உலகில் இடம்பிடிக்க ஆரம்பத்தில் விஜய் சேதுபதியை குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க பல வருடங்கள் காத்திருந்த நிலையில் தற்போது பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றது காரணம் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அது குணச்சித்திர கதாபாத்திரமாக இருந்தாலும் சரி வில்லன் ஹீரோ என எதுவாக இருந்தாலும் எந்த ஒரு நடிகரின் சாயலும் இல்லாமல் தனது தத்துவம் நடிப்பை வெளிக் காட்டி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

சமீபத்தில் கூட விஜய்யின் மாஸ்டர் மற்றும் தெலுங்கில் வெளியான உப்பென்னா என்ற படத்திலும் இவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.இந்த நிலையில் இயக்குனர் பிரவீன் காந்தி என்பவர் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் சேதுபதி என கூறி அதிர்ச்சி கொடுத்தார். சமிபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரவீன்காந்தி ரஜினி வழியில் விஜய் சேதுபதி செல்வதாக தெரிவித்தார்.

இச்செய்தி தற்போது அஜித் விஜய் ரசிகர்களை கோபமடையச் செய்து உள்ளது சினிமா உலகில் ரஜினிக்கு பிறகு தனது சிறந்தபடங்களை கொடுத்து வரும் இவர்களுக்கு மத்தியில் இன்னொருவராக என்பது பலரின் கேள்வி குறியாக இருக்கிறது. விஜய் சேதுபதி தற்போது டாப் நடிகராக இருப்பதால் பல இயக்குனர்கள் அவரை புகழ்ந்து சொல்லிஅவரது படங்களில் நடிக்க முன்னப்பு காட்டுகின்றனர்.

இயக்குனர் பிரவீன் காந்தி இதற்கு முன்பு ஜோடி, ரட்சகன் போன்ற இரண்டு படங்களை இயக்கியுள்ளார் மேலும் இந்த ஊர் அடங்கி காலகட்டத்திலும் இரண்டு கதைகளை எழுதி வைத்துள்ளாராம்.  அந்த கதைக்கு விஜய் சேதுபதியை செட் பண்ண இப்படி புகழ்ந்து சொல்லுகிறாரோ என்றும் ஒரு சிலர் கிண்டல் அடிக்கின்றனர்.

Leave a Comment

Exit mobile version